யோவான் 16:32

இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன் தன் இடத்துக்குப் போய் என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.

ஒன்று நம்மை நாமே சிந்தித்து பார்ப்போமா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஏன் அப்படி சொன்னார்?

நாம் அவரோடே ஒப்புரவாகிறோம். அதுதான் ஞானஸ்நானம் அதன்பின்பு நாம் நம்முடைய மனம் போனபோக்கில் நம்முடைய விருப்பத்தின்படி உலக காரியங்களுக்காக நேரத்தை எல்லாம் செலவழித்து, வீணான காரியங்கள், பல உலக கவலைகளினிமித்தம் நம்முடைய மாம்சமும், மனதும் விரும்பினதை செய்யும்படியாக மனதை சிதறடித்து அவரை விட்டு தூரம் போய்விட்டு நம் விருப்பப்பிரகாரம் எப்போதாவது வருகிறோம். இல்லையென்றால் வராமல் இருக்கிறோம். ஒன்று உணர்வடைந்து ஒப்புகொடுக்க வேண்டும். இது தான் அந்த நேரம் ; யாவரும் அவரவர் குறைகளை ஒப்புக்கொடுத்து ஜெபித்தால் அதன் விடுதலையை பெற்றுக்கொள்ள முடியும்.

எபேசியர் 2:4-9                                                                                                               

தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்.(நம் ஆத்துமா உயிர்பிக்கப்படுகிறது); கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.

 

அதைதான் யோவான் 16:28 –ல், நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன் மறுபடியும் உலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடே எழுப்பி, உன்னதங்களிலே அவரோடே கூட உட்கார செய்கிறார்.

நம்முடைய தேவன் தன் ஒரே பேறான குமாரனை உலகத்தில் அனுப்பி அவரை ஒப்புக்கொடுத்து உயிர்பித்தது போல் நம்முடைய உள்ளத்தில் இந்த காரியங்களை எல்லாம் செய்கிறார். கிறிஸ்துபிறப்பு, நம்முடைய உள்ளத்தில் நம்முடைய பழைய செயல்கள், பாவம், அக்கிரமம், மீறுதல், பாரம்பரிய வாழ்க்கை, உலக வழிபாடுகள், தேவன் விரும்பாத பகைக்கிற மாம்ச சிந்தை, மாம்ச இச்சை, உலக சிநேகம், தேவன் விரும்பாத அத்தனை காரியங்கள், செயல்பாடுகள் யாவற்றையும் கிறிஸ்துவோடு கூட அத்தனை பழைய சுபாவங்களையும் சிலுவையில் அறைந்து, யாவற்றிற்கும் நாம் மரித்து எல்லாவற்றையும் நாம் அடக்கம்பண்ணி புதிய சரீரமாக எழுந்தவர்களாக இருக்க வேண்டும். இவை எல்லாம் நம் உள்ளத்தில் நடப்பதுதான். நம்முடைய முதலாம் உயிர்தெழுதல். எல்லாம் நம்முடைய  உள்ளத்தில், உலகத்திலுள்ள கொண்டாட்டத்தில் அல்ல, என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

அன்பான, இதை வாசிக்கிறவர்கள் சிந்திக்ககடவர்கள். சிந்தித்து நம் ஒவ்வொருவருடைய குறைகளை அறிக்கை செய்வோம். தேவனுடைய சத்தியம் கேட்டும் வீசி எறிந்தோம். தேவாலயங்களில் சத்தியம் பேசப்படவில்லை. சத்தியம் வெளிப்படுவதற்கு காத்திருக்கவில்லை. நாம் கண்ணீர் விட்டு அழுது, தேவனிடத்தில் குறைகளை அறிக்கை செய்து ஜெபிப்போம்.

ஆமோஸ் 5: 16-23

ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் ; சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும் எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள் பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரிபாட அறிந்தவர்களைப் புலம்புகிற தற்கும் வரவழைப்பார்கள்.

எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும், நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர்  சொல்லுகிறார்.

கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.

சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டது போலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின் மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.

கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ?

 

உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன் உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை.

உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கிகரிக்கமாட்டேன் கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்.

உன் பாட்டுகளின் இரைச்சலை என்னை விட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.

உலக பண்டிகைகளை கொண்டாடி கர்த்தருக்கு ஆசரிப்பு செய்தவர்களை தேவன் பகைக்கிறார். அதனால் இன்றைக்கு உலகமே இருளாக இருக்கிறது. இவ்விதமான தவறுகளை தேவ ஆலயங்கள், தேவ வசனங்களை பேசுகிறவர்கள், தேவனுடைய தொண்டர்கள், தேவ ஜனங்கள்

இவ்விதமான பல காரியங்களை செய்வதனால் சபைகள் பரிசுத்ததிற்கு மாறாக செயல்படுகிறது.

நாமோ எப்படி இருக்க வேண்டும்?

இயேசுகிறிஸ்துவினிடத்தில் கேட்டறிந்த சத்தியத்தின்படியே நடக்க வேண்டும்.

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

அதனால் யோவான் 17:16 –ல் நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் உலகம், மாமிசம், பிசாசு இவற்றையெல்லாம் தேவ வசனத்தினால் ஜெயிக்க வேண்டும். ஒவ்வொரு நாளிலும் ஜெயித்து பின் நம்மை அனுதினம் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கும்போது தேவன் அவருடைய வல்லமையினால் நம்மை நிறைத்து நம்முடைய ஜெபத்திற்கு பதில் தருவார்.

அன்பானவர்களே! நாம் அனுதினம் தேவ வசனம் கைக்கொள்ளும்போது, நாம் அல்ல நமக்குள் இருக்கிறவர் நமக்காக வேண்டுதல் செய்வார்.

ரோமர் 8:26-ன் படி, அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில்  நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்.

யோவான் 17:15

நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக் கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

யூதா 1:20,21

நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிபடுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,

தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக் கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்.

கொலோசெயர்  2:12-15

ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம் பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாவும் இருக்கிறீர்கள்.

உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;

நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;

துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்.

இவ்விதமாக தேவன் இவை எல்லாவற்றிலிருந்து நம்மை விடுவித்து இரட்சித்து நம்மை இவ்வுலக கேட்டிலிருந்து நம்மை அவருடைய இரத்ததினால் மீட்டு நமக்கு வெற்றியை தந்த தேவனை நாம் எப்போதும் மகிமைப்படுத்த கடவோம்.

நம்மை அவருடைய இரத்ததினால் மீட்டு எடுத்த பிறகு நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாக காக்கப்படவேண்டும்.ஜெபியுங்கள்

-நாளை தொடர்ச்சி.