தேவனுடைய ஆலயமாகுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 06, 2020


ரோமர் 6:7

மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கபட்டிருக்கிறானே.


நீங்கள் யாவரும் சிந்தித்துக்கொள்ளுங்கள். ஒரு மனிதன் மரித்து போனால் அவன் எந்த     பாவமும் செய்யமாட்டான்.

ரோமர் 6:8

ஆகையால் கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.

அவருடனே பிழைத்தவர்கள் தான் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியும்.   

எபிரெயர் 10:38,39

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.

நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிவர்களாயிருக்கிறோம்.

எவ்விதமான துன்பங்கள், கஷ்டங்கள், பாரங்கள், வறுமைகள், பிரிவினைகள், வியாதிகள், நெருக்கங்கள், தொல்லைகள் வந்தாலும் நாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விட்டு ஒருபோதும் நாம் பின் வாங்கி போகாதபடி நம்முடைய ஆத்துமா ஈடேற நாம் விசுவாசிக்கிறவர்களாயிருக்க வேண்டும்.

அதனால் தான், ரோமர் 8:36-39

கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர் களாயிருக்கிறோமே.

மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங் களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,

உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

யோவான் 3:16- ல் தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுபோகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். என்று எழுதியிருக்கிறது.

விசுவாசம் என்றால் என்ன?

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது. (எபிரெயர் 11.1) (தேவனுடைய வார்த்தை – அதுதான் தேவன்).

யாரில் விசுவாசம் உள்ளது? 

விசுவாசம் உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்.

1யோவான் 5:1

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான் பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.

அதைதான், யோவான் 1:1-5 வரை வாசிக்கும்போது,

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். (தேவனுடைய வார்த்தை தான் இயேசு கிறிஸ்து).

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலே யல்லாமல் உண்டாகவில்லை.

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.

யோவான் 1:14

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்; நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம் அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

அந்த மகிமையை நாம் ஒவ்வொருவரும் இந்த நாட்களில் பெற்றுக் கொள்ளவேண்டும். உங்களால் தேவனுடைய சபைக்கு வர முடியாமல் இருக்கிற இந்த நாட்களில் தாங்கள் அவரவர் வீடுகளில் இருந்தாவது தேவனுடைய வார்த்தைகளை தியானித்து தங்கள் வாழ்க்கைகளை நாம் முழுமையாக மாற்றி தேவனுடைய மகிமையில் நாம் ஒவ்வொருவரும் நம்மை தேவ மகிமைக்குள்ளாக மறைத்துக்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் நம் உள்ளத்தில் வர நாம் இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்க வேண்டும்.

1யோவான் 5:5 

இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?

விசுவாசம் கிரியையில் உண்டாயிருக்க வேண்டும்.

யாக்கோபு 2:17

அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.

யாக்கோபு 2:19

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லது தான் பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.

ஆனபடியால் உங்களிடத்திலும் என்னிடத்திலும் கிரியைகளில் லாதிருந்தால் அதின் பிரயோஜனம் என்ன? நம்முடைய ஆத்துமா செத்ததாயிருக்குமே. நம்முடைய ஆத்துமா செத்திருந்தால்  விசுவாசத்தினால் பிரயோஜனம் என்ன?

யாக்கோபு 2:24

ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப் படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.

யாக்கோபு 2:26

அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

நம்மளில் எத்தனை பேர்  இந்த உலகத்தை ஜெயித்தவர்கள்? இன்று இப்பொழுது சிந்தித்து பார்ப்போமா?

உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்கு சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்கு பகைஞனாயிருக்கிறான்.

உலகத்தையும் உலகத்திலுள்ளவைகளையும் சிநேகிக்கிறவர்களை,

 யாக்கோபு 4:4 –ல் விபச்சாரரே, விபச்சாரிகளே என்று எழுதப்பட்டிருக்கிறது.

 

பிரசங்கி 3:11 –ல் அவர் சகலத்தையும் அதனதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் உலகத்தையும் அவர்கள் உள்ளத்தில் வைத்திருக்கிறார் ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.

ஆதலால், யோவான் 16:28

நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன் மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். இதனை குறித்து நாளை தேவ கிருபையினால் தியானிப்போம்.

ஞானஸ்நானம் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும். எபேசியர் 2 –ம் அதிகாரம் வாசிக்கும்போது அதை தியானித்தால் தெரிய வரும். நாம் நம்முடைய தேவனோடே ஒப்புரவாகி, சீயோன் நகரமாகவும், தேவனுடைய ஆலயமாகவும், தேவனுடைய வாசஸ்தலமாகவும் கட்டப்பட்டு வருகிறோம்

 

-தொடர்ச்சி நாளை.