தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 23: 20,21

மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே.

குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை அந்நிய அக்கினியால் அழிந்துப்போகாதபடி  பாதுகாக்க, நாம் புசிக்க வேண்டியது என்ன என்று கர்த்தர் கொடுத்த கட்டளை

        கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், நம்முடைய ஆத்துமா அந்நிய அக்கினியால் அழிந்து போகாதபடிக்கு, எந்த அசுத்தத்திலோ, தீட்டானவைகளிலோ  தொடாதபடி பரிசுத்தமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய ஆத்துமா அசுத்தம் ஆகாதபடி நாம் காத்துக்கொள்ளப்பட வேண்டும். கர்த்தர் நமக்கு கூறியுள்ள எந்த அசுத்தமானவைகளையும் நாம் புசிக்கக்கூடாது. மேலும் நாம் கவனமாக வாசித்து தியானிக்க வேண்டிய பகுதி கீழே கொடுக்கப்படுகிறது. இதனை வாசிக்கிற அன்பானவர்களே யாரும் நிர்விசாரமாக இருந்து விடாதீர்கள். 

லேவியராகமம் 11:1-47

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்:

மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.

தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.

பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,

பருந்தும், சகலவித வல்லூறும்,

சகலவித காகங்களும்,

தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,

ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,

நாரையும், கூழக்கடாவும், குருகும்,

கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே.

பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

ஆகிலும், பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,

வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.

பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.

நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,

உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.

சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலம்மட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.

அவைகளில் ஒன்று மண்பாண்டத்துக்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.

புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.

அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

ஆனாலும், நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும் சுத்தமாயிருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.

மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.

அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப்போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.

தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும் வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.

ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.

நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.

நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.

சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு,

மிருகத்துக்கும் பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.

மேற்க்கூறிய பகுதியை நாம் தியானிக்கும் போது மிருகங்களில் விரிகுளம்புமுள்ளதும், குளம்புகள் இரண்டாக பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமானவைகள் எல்லாம் புசிக்கலாம். ஆனால் ஒட்டகத்தின் மாம்சம் புசிக்கக்கூடாது.  என்னவெனில், அது அசைபோடும் ஆனால் அதற்கு விரிக்குளம்பில்லை.  அதனால் அது அசுத்தமானது. அதுபோல் குழி  முசல்கள், அதற்கு விரிகுளம்பில்லை, ஆனால் அசைபோடும் , அதனால் அவை புசிக்கக் கூடாது.  அது அசுத்தமானது. முயல் இதுவும் அசை போடும், ஆனால் விரிக்குளம்பில்லை, அதனால் அது அசுத்தமானது, அதையும் புசிக்கக்கூடாது.  பன்றியானது விரிகுளம்பு உண்டு, ஆனால் அது அசைப்போடாது, அது அசுத்தமானது, அதனைப் புசிக்கக்கூடாது.  அதனால் கர்த்தர் சொல்கிறது, இதன் மாம்சத்தை புசிக்கவோ,இதன் உடலை தொடவோ கூடாது. அதை தொடுகிறவன் தீட்டாயிருப்பான் என்று கூறப்படுகிறது.

அடுத்தப்படியாக ஜலத்திலிருக்கிறவைகளில் நாம் புசிக்கத்தக்கது யாதெனில் சிறகும் செதில்களுள்ளவைகளெல்லாம் புசிக்கலாம், ஆனால் அது கடல் தண்ணீரிலும், ஆறுகளிலும் வளருகிறவைகளாக இருக்க வேண்டும்.  ஆனால் கடலிலும், தண்ணீரிலும் வாழ்கிறதில் சிறகும், செதிலும் இல்லாதவைகள்  நமக்கு அருவருப்பானது என்று தேவ வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது.

மேலும் பறவைகளில் நாம் அருவருக்க வேண்டியது லேவியராகமம் 11:13-19 வரை நாம் வாசித்து அறிந்துக்கொள்ளலாம்.  ஆனால் சில பறவைகளில் நாலு காலால் நடமாடுகிற ஊரும் பிராணிகள் யாவும் நமக்கு அருவருப்பானது.  ஆனால் பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற பறவைகளில் தரையிலே தத்துகிறதற்கு கால்களுக்கு மேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே வெட்டுகிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளி ஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளி ஜாதியாயிருக்கிறதையும் புசிக்கலாம்.  பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற மற்றவை யாவும் அருவருப்பானவைகள் என்று நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் இப்படிப்பட்டவைகளை தொட்டவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுபட்டிருப்பான் என்று எழுதப்பட்டிருக்கிறது.  

        மேற்க்கூறிய பகுதியை நாம் தியானித்தால் நியாயப்பிரமாணம் நம்முடைய உள்ளான மனுஷன்  பரிசுத்தமடைவதற்கு ஏதுவாயிருக்கிறது. ஆனால் இன்றைக்கு நாம் பார்க்கும் போது இதனை கையாள்கிறவர்கள் மிக குறைவாகக் காண்படுகிறார்கள். ஏனென்றால் ஆவிக்குரிய கண்கள் அவர்களுக்கு திறக்கப்படவில்லை.  ஏனென்றால் அவர்கள் போஜன பிரியனாக காணப்படுகிறார்கள். போஜனபிரியனோடு கர்த்தர் சொல்வது என்னவென்றால் உன் தொண்டையிலே கத்தியை வை என்று சொல்கிறார்.   

நீதிமொழிகள் 23: 1,2

நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.

நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.

அதிலும் சில போஜனபிரியர்கள் இந்த வார்த்தைகளை கேட்டால் நம்பமாட்டார்கள்.  என்னவெனில் கர்த்தர் அப்போஸ்தலனாகிய பேதுருவுக்கு கொடுத்த தரிசனம்  

அப்போஸ்தலர் 10:10-22

அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,

வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,

அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.

அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.

அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.

அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று:

பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.

பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்துச் சிந்தனைபண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.

நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.

அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான்.

அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனாலே தேவயத்தனமாய்க் கட்டளைபெற்றார் என்றார்கள்.

மேலேக் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் அடித்து புசி என்றிருக்கிறதால் கண்கள் திறவாதவர்கள் இந்த வார்ததைகளை சொல்லி, எல்லாவற்றையும் புசித்து தங்களை அசுத்தமும், அருவருப்புமாக்கி கொள்கிறார்கள்.  ஆனால் அந்த வசனங்களின் விளக்கங்கள் என்னவென்றால் ஒரு ஆத்துமா எந்த வித ஜாதியாகயிருந்தாலும் ஆட்டுகுட்டியானவரின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்டபின்பு அவர்களை அசுத்தம் என்று தள்ளிவிடாமல் நம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே கர்த்தர் அந்த தரிசனத்தை பேதுருவுக்கு காட்டி, பின்பு கொர்நேலியுவுடைய வீட்டுக்கு போகும்படி செய்கிறார்.  

        ஆதலால் பிரியமானவர்களே வசனங்களை தவறாக புரிந்துக்கொள்ளாமல், தவறாக  உபதேசிக்கிறவர்களிடத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.  நம்முடைய ஆத்துமா அசுத்தத்திலும், அருவருப்புகளிலும் சிக்கிக்கொள்ளாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும், மற்றும்  இந்த வார்த்தைகளின் விளக்கம் கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த நாட்களில் தியானிப்போம், வாசிக்கபட்ட பகுதிகளை ஏற்றுக்கொண்டவர்களாக ஒப்புக்கொடுத்தால் கர்த்தர் நம்மை அநேக இக்கட்டிலிருந்து நீங்கலாக்கி விடுவிப்பார். ஒப்புப்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.