" உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். "
நீதிமொழிகள் 22:19உங்கள் வாழ்க்கையை பற்றியதான நம்பிக்கை இருக்கிறதா ? சிநேகிதா ! நீங்கள் படிக்கும்போதே உங்களுக்கு எந்த காரியத்தில் நம்பிக்கை இல்லையோ இப்போதே தேவன் நம்பிக்கை தந்திடுவார்.
காணப்படுகிறவைகளை நம்புவது நம்பிக்கையல்ல. காணாததை நம்பினோமாகில் அது வருவதற்கு பொறுமையோடே காத்திருப்போம் காணப்படுவது அநீதி காணாதது நீதி ( அதுதான் நித்திய ஜீவன் )
- உங்கள் வாழ்க்கையில் கசப்பா !
- உங்கள் வாழ்க்கையில் தோல்வியா !
- உங்கள் வாழ்க்கையில் வேதனையா !
- உங்கள் வாழ்க்கையில் சமாதானமின்மையா !
- உங்கள் வாழ்க்கையில் நெருக்கமா !
- உங்கள் வாழ்க்கையில் வியாதியா !
- உங்கள் வாழ்க்கையில் கடன்பாரமா !
- உங்கள் வாழ்க்கையில் வறுமையா !
1 பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். அனுதினம் இதனுள் வாருங்கள் செய்தியை கேளுங்கள் எங்களோடு சேர்ந்து ஜெபியுங்கள். ( சரீர மீட்பாகிய புத்திர சுவிகாரம் தந்து கர்த்தர் உங்களுக்கு எல்லா காரியங்களிலேயும் சீக்கிரத்தில் நம்பிக்கை தந்திடுவாராக )
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
அல்லேலுயா !