தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 80:7
சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா தேவனுடைய நிணமும் கொழுப்பும் உண்ண வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு வரும் கிருபை தேவனுடையது என்பது குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 63:1-4
தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.
மேற்கூறிய வசனங்களில் கூறபட்டுள்ள காரியங்கள் என்னவென்றால் நாம் தேவனை அதிகாலையில் தேட வேண்டும்; அப்போது நம்முடைய ஆத்தும தாகத்தை கர்த்தர் தீர்ப்பார். அல்லாமலும் நம்முடைய ஜீவனை பார்க்கிலும் கிருபை (நித்திய ஜீவன்) நல்லது. அவர் கிருபையினால் நம்முடைய உதடு தேவனை துதித்து, அவர் நாமத்தை நாம் பிரஸ்தாபப்படுத்தலாம். அல்லாமலும் நம்முடைய ஆத்துமாவின் திருப்தியை குறித்து
சங்கீதம் 63:5-8.
நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.
என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
மேற்கூறபட்ட வசனங்களினால் கர்த்தர் நம்மை திருப்தியாக்கும் போது, நம்முடைய பிராணனை அழிக்க விரும்புகிறவர்கள் பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்; பட்டயத்தால் விழுவார்கள், நரிகளுக்கு இரையாவார்கள். அப்போது நம்முடைய ராஜாவாகிய கிறிஸ்துவோ நம்மிலிருந்து தேவனில் களிகூருவார்; அவர் பேரில் சத்தியம் பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களில் உள்ளபடி நம்முடைய ஆத்துமா தேவனுக்கு பிரியமான பதார்த்தங்களால் திருப்தியாக வேண்டும். அவ்விதம் திருப்தியாக வேண்டுமானால் பொய் நாவு நம்மை விட்டு அகற்ற வேண்டும். இப்படியாக பொய் நாவு மாறும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.