தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 16:20

சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்காக கிறிஸ்து நம்முடைய சத்துருக்களை நம்முடைய கால்களில் மிதிக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் உணவுக்காக அலைந்து திரியக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 60:1-12 

தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.

பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது.

உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.

சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா.)

உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும்.

தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.

மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.

அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம் மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்?

எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீர் அல்லவோ?

இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.

தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

மேற்கூறபட்ட வசனங்களில் இந்த சங்கீதமாவது தாவீது மெசொபொத்தாமியா தேசத்து சீரியரோடும், சோபா தேசத்துச் சீரியரோடும் யுத்தம் பண்ணின போது, யோவாப் திரும்பி உப்பு பள்ளதாக்கிலே ஏதோமியரில் பன்னீராயிரம் பேரை வெட்டினபோது அவன் சாட்சியை விளவிக்கும் ஆறுநரம்பு கின்னரத்திலே போதிப்பதற்காக பாடுனதும் இராகதலைவனுக்கு ஒப்புவிக்கபட்டதுமான மிக்தாம் என்னும் சங்கீதம். மேற்கூறபட்ட வசனங்களில் நம்முடைய குற்றங்களினிமித்தம் கர்த்தர் நம்மை சிதறடித்து கைவிட்ட நேரத்தில்  நமக்கு தத்தளிப்பின் மதுபானம் குடிக்கக் கொடுக்கிறதும்; ஆனால் சத்தியத்தினிமித்தம் அவருக்கு பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியை கொடுக்கிறார்.  மேலும் நாம்  விடுவிக்கபடும்படி அவருடைய வலது கரத்தினால் இரட்சித்து நம்முடைய ஜெபத்திற்கு செவிக்கொடுத்தருளும் என்று விண்ணப்பம் தேவனுக்கு செலுத்துவோமானால்  தேவன் நமக்கு செய்வதும், சொல்வதும் என்னவென்றால்  

சங்கீதம் 60:6-12 

தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.

மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.

அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம் மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்?

எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீர் அல்லவோ?

இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.

தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

மேற்கூறபட்ட வசனங்களின் கருத்துக்களில் எல்லா ஜாதியாரையும் கிறிஸ்து ஆளுகை செய்து சத்துருக்களை ஜெயிக்கிறார்.  ஆதலால் தேவனாலே நாம் பராக்கிரமம் செய்வோம்; அவரே எல்லா சத்துருக்களையும் மிதித்துப் போடுவார்.  ஆதலால் பிரியமானவர்களே நாம்  தேவனுடைய சத்தியத்தின்படி கேட்டறிந்து, நம்மை அவற்றில் உறுதிபடுத்தி கொள்வோமானால் அவரே நம்முடைய சத்துருக்களை கால்களின் கீழ் மிதித்து போடும் வண்ணமாக ஒப்பு கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.