தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சகரியா 1:16
ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் உணவுக்காக அலைந்து திரியக்கூடாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவனால் பழிவாங்காதபடி நம்முடைய துன்மார்க்கத்தை விட்டு விடவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 59:1-15
என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.
இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள்; கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள்.
என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்.
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா.)
அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.
அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.
அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.
தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா.)
அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
மேற்கூறபட்ட கர்த்தரின் வார்த்தைகளில் சவுல் தாவீதை கொல்லுவதற்காக ஏவலாட்களை அனுப்பின போது அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க தாவீது பாடி இராகதலைவனுக்கு ஒப்புவிக்கபட்ட மிக்தாம் என்னும் சங்கீதம். இந்த சங்கீதமாவது நம்முடைய வாழ்வில் சத்தருவினால் ஒடுக்கபடும்போது கர்த்தரிடத்தில் மேற்கூறபட்டுள்ளபடி விண்ணப்பங்கள் செலுத்தப்பட வேண்டும் என்றும்; மேலும் கர்த்தர் தம்முடைய வல்லமையினால் என்னை சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிகட்டுதலை நாம் காணும்படி செய்வார். மேலும் கர்த்தர் நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு எடுக்கும்படியாகவும், நம்முடைய நாவு பேசின சகல பாவங்களும், நாம் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் நம்முடைய பெருமையில் அகப்படுத்தும்படிக்கு கிறிஸ்து நமக்காக விண்ணப்பித்து, தேவன் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று நாம் அறியும் பொருட்டு நம்மை அவருடைய உக்கிரக்கத்திலே நிர்மூலமாக்கும் என்றும்; இனி பாவபழக்கங்கள் இராதபடி அவர்களை நிர்மூலமாக்கும் என்கிறார். ஏனென்றால் இப்படியிருக்கிறவர்களுடைய கிரியைகளோவென்றால் அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து, நாய்களை போல ஊளையிட்டு ஊரை சுற்றி திரிகிறார்கள் (இவர்கள் தங்கள் அழுக்குகளை கழுவாமல் சத்தியத்திற்கு மாறாக உபதேசங்களை மாற்றி ஜனங்களை வஞ்சித்து, சாயங்காலத்தில் வீடுகள் தோறும் சென்று தங்கள் செலவுகளுக்காக அலைந்து திரிந்து, திருப்தியடையாமல் முறுமுறுத்து கொண்டிருப்பார்கள். ஆனால் கிறிஸ்துவோ சொல்கிறார்
சங்கீதம் 59:16,17
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.
மேற்கூறபட்ட வசனங்களினால் நாம் திருப்தியடையும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.