தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 7:17
நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் சத்துரு வெட்டின குழியில் விழாதபடி நம்மை பாதுகாக்க கர்த்தரை புகழ்ந்து போற்றி துதிப்போம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சத்துருவின் கையில் அகபட்டால் நாம் தேவனிடத்தில் பண்ணின பொருத்தனையாகிய ஸ்தோத்திரபலியை செலுத்தக்கடவோம் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 57:1-8
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.
எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.
தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். (சேலா.)
என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.
என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் தாவீது சவுலுக்கு தப்பியோடி கெபியில் ஒதுங்குகையில் தனக்கு நஷ்டம் நேரிடாதபடி அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க தாவீது பாடி இராகதலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம். இந்த சங்கீதத்தில் நாம் சத்துருக்களிடத்தில் சிக்கிக் கொள்ளாதபடி ஒதுங்கி இருக்கும் போது, அதனிடத்தினின்று தப்பிக்கொள்ளும்படி தேவனிடத்தில் மன்றாடி வேண்டுதல் செய்வதும், தேவனை போற்றி புகழுவதும், மேலும் நம்முடைய கால்கள் சத்துருவின் கண்ணிகளாகிய பலவித இச்சைகளில் சிக்கிக்கொள்ளாதபடியும், நம்முடைய ஆத்துமா தொய்ந்து போகாதபடியும், சத்துரு நமக்கு குழியை வெட்டி நாம் அதிலே விழுந்து போகாதபடி இருக்கும்படியாக நம்முடைய இருதயம் கர்த்தருக்காக ஆயத்தமாயிருக்க வேண்டும். அவ்விதம் ஆயத்தத்தோடு நாம் கர்த்தரை பாடி கீர்த்தனம் பண்ணும் போது, நமக்கு வெட்டின குழியில் சத்துரு விழுவான். அப்போது கிறிஸ்துவின் மகிமை விழிக்கும். அதனை குறித்து
சங்கீதம் 57:9-11
ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது.
தேவனே, வானங்களுக்குமேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
மேற்கூறபட்ட வார்த்தைகளினால் கர்த்தரை போற்றி புகழ்ந்து பாடி கீர்த்தனம் பண்ணும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.