தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோனா 2:9
நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் சத்துருவின் கையில் அகபட்டால் நாம் தேவனிடத்தில் பண்ணின பொருத்தனையாகிய ஸ்தோத்திரபலியை செலுத்தக்கடவோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் இரத்தபிரியராகவோ, சூதுள்ள மனுஷர்களாவோ இருக்கக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்
சங்கீதம் 56:1-13
தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்.
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.
அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்து வருகிறார்கள்.
அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும்.
என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.
தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?
தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்.
நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?
மேற்கூறபட்ட வசனங்களில் பெலிஸ்தர் தாவீதை காத்தூரில் பிடித்தபோது யோனாத் ஏலம் ரிக் கோகீம் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி தாவீது பாடி இராகதலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம். இந்த சங்கீதமாவது நாம் சத்துருக்களின் கையில் அகப்பட்டு விட்டால் அதனிடத்தினின்று தப்பும்படி தேவனிடத்தில் விண்ணப்பிக்கும் விதமும்; மேலும் நாம் தேவனுக்கு முன்பாக பண்ணின பொருத்தனைகளினால் தேவனுக்கு ஸ்தோத்திரபலியை செலுத்துவதும்; அப்படி நாம் ஸ்தோத்திரபலியை செலுத்தி தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும் படி, நம்முடைய ஆத்துமாவை மரணத்திற்கும், கால்களை இடறுதல்களுக்கும் தப்புவிப்பாராகையால் நாம் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாக காத்திருந்து தப்பும்படி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.