தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவேல் 2:19
கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நெருக்கத்திலிருக்கிறவர்களுக்கு ஆதரவாகயிருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் நம்முடைய ஆத்தும மதிகேடனாக விளங்கக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்
சங்கீதம் 54:1-7
தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும்.
தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா.)
இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.
அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.
உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது.
அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
மேற்கூறபட்ட வசனங்களின் தாவீது தங்களிடத்தில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று சீப்பூரார் சவுலுக்கு அறிவித்தபோது, நெகினோத்தில் வாசிக்கத் தாவீது பாடி இராக்தலைவனுக்கு ஒப்புவித்த மஸ்கீல் என்னும் சங்கீதத்தின் கருத்துகள் என்னவென்றால் நமக்கு விரோதமாக அந்நியர்களாகிய கொடியர்கள் பிராணனை வாங்க தேடும்போது தேவன் நமக்கு சகாயராகவும், ஆண்டவர் நம்முடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார் என்றும்; நம்முடைய சத்துருக்களுக்கு தீமைக்கு தீமையைச் சரிக்கட்டுவார் என்றும்; தம்முடய நாமத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்குவார். அப்போது நம்முடைய ஆத்துமா விடுதலையாகி தேவனுக்கு உற்சாகத்தோடு பலியிடும்படியும், கர்த்தரை துதிப்பேன் என்றும், அது நலமானது என்றும் நாம் சொல்வதால் கர்த்தர் நம்மை எல்லா நெருக்கத்தையும் நீக்கி நம்மை விடுவிப்பார்; ஆதலால் நம்முடைய கண் நம்முடைய சத்துருக்களில் நீதி சரிகட்டுதலை கண்டது. ஆதலால் பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களின் படி நெருக்கத்தினின்று நாம் விடுதலையாகும்படி உற்சாகத்துடன் தேவனுக்கு பலியிடும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.