தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 15:4
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய நாவால் நன்மையானவைகளையும், யதார்த்தமானவைகளையும் பேச வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பெற்றுள்ள பரிசுத்த ஆவியை கர்த்தர் நம்மைவிட்டு எடுக்காதபடி காத்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்
சங்கீதம் 52:1-8
பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.
நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா.)
கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.
தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)
நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:
இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்; தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
மேற்கூறிய வசனங்களில் பலவான்களை குறித்து கூறப்படுகிறது. இந்த தேவனுடைய வார்த்தையாவது தாவீது அபிமேலேக்கின் வீட்டிற்கு வந்தானென்று எதோமியனாகிய தோவேக்கு வந்து சவுலுக்கு அறிவித்த பின்பு தாவீதினால் பாடபட்டு இராகதலைவனுக்கு ஒப்புவிக்கபட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம். இந்த சங்கீதம் சவுலிடம் பொல்லாத ஆவி கிரியை செய்து கொண்டிருந்தால் அவனில் இருந்த பெருமையின் காரணமாக அவன் கேடுகள் செய்ய எத்தனம் பண்ணுகிறான். அதனை போல் நாம் இருப்போமானால் நம்மில் கபட நாவு தீட்டபட்ட சவரகன் கத்தியை போல் இருக்கிறது என்கிறார். இப்படிபட்டவர்கள் யாராக இருந்தாலும் நன்மையை பார்க்கிலும் தீமையையும் யதார்த்தம் பேசுகிறதை பார்க்கிலும் பொய் பேசுகிறதை விரும்புவார்கள். அவர்கள் சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் விரும்புவார்கள். அப்படிபட்டவர்களை தேவன் என்றன்றைக்கும் இல்லாதபடி அழித்து போடுவார். மேலும் கர்த்தர் அவர்களை அவர்கள் வாசஸ்தலங்களிலிருந்து பிடுங்கி, ஜீவனுள்ளோர் தேசத்தில் இராமல் நிர்மூலமாக்குவார். நீதிமான்கள் அதனை பார்த்து நகைத்து சொல்வது தேவனை தன் பலனாக எண்ணாமல் தங்கள் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன் தான் என்றும், நானோ தேவனுடை ஆலயத்தில் பச்சையான ஒலிவ மரத்தை போலிருக்கிறேன் என்றும் தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன் என்கிறார். மேலும் அவர் சொல்வது
சங்கீதம்52:9
நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.
மேற்கூறிய வசனங்களில் தேவன் துன்மார்க்கனை அழிக்கிறதை குறித்து நீரே இதை செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்கு காத்திருப்பேன் என்பதால் உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது. இப்படியாக நம்முடைய வாழ்வில் துன்மார்க்கத்தால் நம்முடைய நாவு கறைபடாதபடி, அதனை கர்த்தர் அழிக்கும் போது, நாம் அவருக்கு காத்திருந்து உண்மையுள்ள நாவால் அவர் நாமத்தை என்றென்றைக்கும் துதிக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.