தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 26:8
கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மில் தேவனே நியாயாதிபதியாக விளங்குகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா பாதாளத்தின் வல்லமையினின்று மீட்கபட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்
சங்கீதம் 50:1-6
வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசைதொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.
பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.
அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா.)
மேற்கூறபட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் ஆசாபின் சங்கீதமாகிய இந்த சங்கீதமாவது கர்த்தர் நம்மில் இருந்து பிரகாசிக்கிறது எப்படியென்றும், கிறிஸ்து சீயோனாக நம்மில் கிரியை நடப்பிக்கும் போதும்; நாம் பூரண இரட்சிப்பை பெற்றுக்கொண்டு, கர்த்தரிடத்தில் பூரண நம்பிக்கையுள்ளவர்களாக விளங்கும் போதும் பிரகாசிக்கிறார். அவருக்கு முன் அக்கினி பட்சிக்கும், அவரை சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும். என்னவெனில் நம்முடைய வாழ்வில் நியாயாதிபதியாக செயல்படுகிறார். நம்மில் இருக்கிற காட்டை (அநியாயத்தை) அவர் வார்த்தையாகிய அக்கினியை அனுப்பி கொழுத்தி விடுகிறார். மேலும் அவர் நியாயந்தீர்க்க மனுபுத்திரரையும், மனுஷரையும் அழைத்து வைத்து; பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்கிறார். கர்த்தரோடுகூட பரிசுத்த வான்களும் நியாயத்தில் இருப்பார்கள் எனறு எழுதப்பட்டிருக்கிறது. அப்போது வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும். தேவனே நியாயாதிபதி.
பிரியமானவர்களே, நம்முடைய வாழ்வில் நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் தேவனே நியாயாதிபதியாக விளங்குகிறார். ஆதலால் நம்முடைஎல்லா நடத்தைகளும் தேவனுக்கு சித்தமானவைகளை செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.