தேவனுக்கே மகிமையுண்டாவதாக
செப்பனியா 3:17
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார் (மகிழ்வுடன் பாடுவார்).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவுக்கு தேவன் இரட்சிப்பை அருளும் போது நாம் அவரை எப்போதும் துதிப்போம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கலங்காமலும் தியங்காமலும் இருந்து கர்த்தரை துதித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 43:1-5
தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.
என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?
உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.
அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
மேற்கூறபட்ட வசனங்களை தியானிக்கையில் முந்தின நாட்களின் சங்கீதம் இந்த கர்த்தரின் வார்த்தைக்கு பிரயோஜனப்படுகிறதாகும். எப்படியெனில் கலக்கத்தோடும், தியக்கத்தோடும் இருக்கிற ஆத்துமாவை நாம் சீர்படுத்தி நேராக்கி கொண்டு வரும் போது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவாகிய தேவனிடத்தில் மன்றாடுகிற விதம் கொடுக்கபடுகிறது; என்னவென்றால் நமக்குள் தேவன் ஒவ்வொரு நாளும் சத்தியத்தையும் வெளிச்சத்தையும் அனுப்பி தரும்படியாகவும், அனுதினம் நம்மை பரிசுத்த பர்வதத்திற்கும், தேவனுடைய வாசஸ்தலத்திற்கும் நேராக நம்மை கொண்டு போகும்படியாகவும்; அப்படியாக தேவன் நம்மை நடத்தி செல்லும் போது நாம் தேவனுடைய பீடத்தண்டைக்கும், நமக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் நம்மில் கிறிஸ்து பிரவேசிக்கிறார். அப்போது அவர் சொல்கிறதாவது தேவனே, என் தேவனே, உம்மை சுரமண்டலத்தால் துதிப்பேன். அப்போது நம் ஆத்துமா கலங்காமலும், தியங்காமலும் தேவனை நோக்கி காத்திருந்து நம்முடைய முகத்துக்கு இரட்சிப்பும், நம்முடைய தேவனுமாயிருக்கிறவரை நாம் துதிப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.