தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 28:8

கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கலங்காமலும் தியங்காமலும் இருந்து  கர்த்தரை துதித்துக் கொண்டிருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஸ்தோத்தரிக்கபட்டவராக எப்போதும்  மகிமைபட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 42:1-8 

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?

உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.

முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.

என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.

உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.

ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்.

மேற்கூறபட்ட வசனங்கள் கோராகின் புத்திரரிலுள்ள இராக தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.  இந்த சங்கீதமாவது நம்முடைய ஆத்துமா எவ்விதம் கர்த்தர் மேல் தாகமாயிருக்கிறது என்பதனையும், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது என்றும், எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன் ? உன் தேவன் எங்கே என்று சத்துருக்கள் நாள் தோறும் சொல்லுகிறபடியால் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.  ஆனால் முந்தின நாட்களில் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான ஜனங்களோடே தேவாலயத்திற்கு போய் வருவேனே.  ஆதலால் முந்தின நாட்களை நினைக்கும் போது என் உள்ளம் உருகுகிறது.  ஆதலால் கர்த்தராகிய கிறிஸ்து நம் ஆத்துமா கலங்காமலும் தியங்காமலும் கர்த்தரை நோக்கி காத்திருக்கும் போது ; அவர் சமூகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் கர்த்தரை துதிப்பேன் என்கிறார்  ஆகையால் யோர்தான் தேசத்திலும், எர்மோன் மலைகளிலுமிருந்து உம்மை நினைக்கிறேன் என்கிறார்.  தேவனுடைய மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது.  அவர் அலைகளும் திரைகள் எல்லாம் என் மேல் புரண்டு வருகிறது என்கிறார் (பயங்கரமான போராட்டத்தை காட்டுகிறார் ) .  ஆகிலும் அந்த போராட்டத்தை ஜெயிப்பதற்காக கர்த்தர் பகற்காலத்தில் தமது கிருபையை கட்டளையிடுகிறார்; இராகாலத்தில் அவரை பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது என்கிறார்.  இவ்விதமாக நம்முடைய சாட்சி உண்டாயிருக்க வேண்டும் என்பதனை நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார்.  மேலும் விண்ணப்பிக்கும் விண்ணப்பமாவது 

சங்கீதம் 43:9-11 

நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.

உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

மேற்கூறபட்ட விண்ணப்பமாவது நமக்காக கிறிஸ்து நம்மிலிருந்து விண்ணப்பிக்கிறதால் நம் தேவனை நோக்கி காத்திருந்து, நம் முகத்திற்கு இரட்சிப்பு தருகிறவரை இன்னும் நான் எப்போதும் துதிப்பேன் என்கிறார். பிரியமானவர்களே, மேற்கூறபட்ட பகுதிகளை நாம் தியானித்து நம் ஆத்துமா கலங்காமலும், தியங்காமலும் இருந்து இரட்சிப்பை தருகிற கர்த்தரை எப்போதும் துதிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.