தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா 19:38 

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஸ்தோத்தரிக்கபட்டவராக எப்போதும்  மகிமைபட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மை நெருக்கத்திலிருந்து சீக்கிரமாய் வந்து விடுவிக்கிறவர் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

சங்கீதம் 41:1-6 

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.

கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.

படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.

கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.

அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.

ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் நம்முடைய சிந்தை எப்படிபட்டதாக இருக்க வேண்டும்: அப்படிபட்டவர்கள் எந்த காரியங்களிலெல்லாம் பாக்கியமுள்ளவர்களாக விளங்குவார்கள் என்பது இந்த சங்கீத வாக்கியங்களில் பாடல் மூலமாக வெளிப்படுகிறது.  இதனைக் குறித்து கூறிய வசனங்கள் கர்த்தர் அப்படிபட்டவர்களை சத்துருவின் கையில் ஒப்புக் கொடுக்க மாட்டார்.  அவர்களை பாதுகாத்து உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான் என்கிறார்.  படுக்கையில் வியாதியாய் கிடக்கிற அவனை கர்த்தர் தாங்குவார்.  அவ்விதம் அவனுடைய படுக்கை எல்லாவற்றையும் மாற்றிப் போடுவார் என்கிறதால் நாமும் அப்படியாக கர்த்தர் நம்மேல் இரக்கம் வைக்கும் படியாக; உமக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவை குணமாக்கும் என்று நாம்  சொல்லும் போது; நமக்கு எதிராக நாம் எப்பொது சாவோம், நம்முடைய பெயர் எப்போது அழியும் என்று நம்முடைய சத்துருக்கள் நமக்கு எதிராக பேசுவார்கள்.  மேலும் ஒருவன் நம்மை பார்க்க வரும் போது வஞசனையாய் பேசுகிறான்.  இவ்விதம் வஞ்சகமாய் பேசுகிறவர்கள் தங்கள் இருதயத்தில் அக்கிரமத்தை சேகரித்துக் கொண்டு அதனை தூற்றுகிறார்கள்.  அவர்கள் கூறுவதை குறித்து கிறிஸ்து சொல்வது 

சங்கீதம் 41:7-13 

என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து,

தீராவியாதி அவனைப் பிடித்துக்கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.

என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.

என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.

நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.

மேற்கூறபட்ட வசனங்களில் என் பகைஞரெல்லாம் என் மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்கு பொல்லாங்கு நினைத்து தீராவியாதி அவனை பிடித்துக் கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள் என்பதனை நம்மை குறித்து கர்த்தர் கூறுகிறார்.  என் பிராண சிநேகிதனும்,  நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என் மேல் தன் குதிகாலை தூக்கினான்.  ஆதலால் கர்த்தாவே எனக்கு இரங்கி நான் அவர்களுக்கு சரிகட்ட எழுந்தருளும்.  பிரியமானவர்களே கர்த்தராகிய கிறிஸ்து மூலம் நமக்கு விரோதமாக எழும்புகிற சத்துருக்களை கர்த்தர் சரிக்கு சரிகட்ட எழும்புகிறார்.  அவ்விதமாக கிறிஸ்து நமக்காக ஜெயம் பெற்று எழும்புகிறதினால் கர்ததருடைய வார்த்தை 

சங்கீதம் 41:11-13 

என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.

நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.

மேற்கூறபட்ட வார்த்தைகள் கர்த்தர் அவர் உத்தமத்திலே நம்மை நடத்துகிறதும், நம்மை அவர் சமூகத்தில் நிலை நிறுத்துகிறபடியால்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றன்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்தரிக்கபடதக்கவர், ஆமென், ஆமென். இவ்விதமாக கர்த்தர் நம் உள்ளத்தில் ஸ்தோத்தரிக்கபட்டவராக ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.