தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யாக்கோபு 5:8 

நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கர்த்தரின் வருகையின் பிரசன்னத்தினால் நிரப்பப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவராக விளங்குகிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 40:1-7 

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.

பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,

நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.

அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.

என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.

பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.

அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது;

மேற்கூறபட்ட  வசனங்கள் இராகவ தலைவனுக்கு ஒப்புவிக்கபட்ட தாவீதின் சங்கீதம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சங்கீதம்.  இந்த சங்கீதத்தில் சொல்லபடுவது கர்த்தர் நம்மிடத்தில் வரும்படியாக பொறுமையோடு கிறிஸ்துவினால் காத்திருந்தோமானால், அவர் கிறிஸ்துவினிடத்தில்  சாய்ந்து, அவர் கூப்பிடுதலை கேட்கிறார். அவர் பாடும் சங்கீதமாவது நமக்காக, நம் குற்றங்களை அறிக்கை செய்து, நம் ஒவ்வொருவரின் அடிகளை உறுதிப்படுத்தும் போது அவர் தேவனை நம்மிலிருந்து துதிக்கும் பாட்டை அவர் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதை கண்டு பயந்து கர்த்தரை நம்புவார்கள் என்கிறார்.  பின்னும் அவர் பாடும் கீதங்களாவன 

சங்கீதம் 40:4,5 

அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.

என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகள் நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து நமக்கு சொல்லும் அறிவுரைகள் என்னவென்றால் அகங்காரிகளையும், பொய்யை சார்ந்திருக்கிறவர்களையும் நாம் பார்க்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.  பின்னும் அவர் உரைப்பது எங்கள் நிமித்தம் நீர் செய்த அதிசயங்களும் யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அதை விவரித்து சொல்லி முடியாது; அவைகளை நான் அறிவிக்க வேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு அடங்காதவைகள்.  இப்படியாக அவர் சொல்வது கிறிஸ்து நம்மோடு இருந்து செயல்படுவதன் விளக்கமாயிருக்கிறது.  மேலும் நம்முடைய பலியையும் காணிக்கையை காட்டிலும் நம்முடைய செவி அவருக்காக திறந்ததே மேல் என்பதும்; சர்வாங்க தகனபலியையும், பாவ நிவாரணபலியையும் அவர் கேட்க வில்லை, அப்போது கிறிஸ்து நான் இதோ வருகிறேன், புஸ்தக சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்கிறார் என்றால் அவர் நம் செவி திறந்து கர்த்தரின் வார்த்தைகளை கேட்கும்போது நம் உள்ளமானது அவருடைய வருகையின் பிரசன்னத்தினால் நிறைக்கப்படுகிறோம் என்பதாகும்.  பிரியமானவர்களே, இதனை கருத்தில் கொண்டு நம் உள்ளமானது கிறிஸ்துவின் வருகையின் பிரசன்னத்தினால் நிறைக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.