தேவனுக்கே மகிமையுண்டாவதாக

11  பேதுரு 3:9

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா. 

மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவராக விளங்குகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் உண்மையாக நம் குறைகள கர்த்தரிடத்தில் அறிக்கை செய்வோமானால் அவர் தீவிரமாய் வந்து நமக்கு நன்மை செய்வார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

சங்கீதம் 39:1-3 

என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.

நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது;

என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்.

மேற்கூறபட்ட வசனங்கள் எதுதூன் இடத்தில் ஒப்புவித்த தாவீதின் சங்கீதம்; இதன் பொருள் என்னவென்றால் நாம் நாவினால் பாவஞ்செய்யாதபடி நம்முடைய எல்லா வழிகளையும் காத்துக்கொண்டு, கர்த்தருக்கு சித்தமில்லாத வார்த்தைகளை பேசாதபடி, நம்முடைய வாயை கடிவாளத்தால் அடக்கி வைக்க வேண்டும்.  நாம் கர்த்தரின் சமூகத்தில் விண்ணப்பம் பண்ணுமுன், மிகவும் அமைதியை காத்துக் கொண்டு இருந்து கர்த்தரின் வார்த்தைகளை தியானிப்போமானால், நம்முடைய இருதயத்தில் அக்கினி மூளும்.  அப்போது கிறிஸ்து உள்ளத்தில் அக்கினியாக வெளிப்படுகிறார்.   மேலும் விண்ணப்பமாவது 

சங்கீதம் 39:4-13  

கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.

இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)

வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.

இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.

என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.

நீரே இதைச் செய்தீர் என்று நான் என் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.

என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன்.

அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே. (சேலா.)

கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.

நான் இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.

மேற்கூறிய வசனங்கள் தியானிக்கையில் நம்முடைய நாவின் பாவத்தினால் கர்த்தர் நமக்கு தண்டனை தந்து, அதினின்று நம்மை விடுவித்து, நாம் தேறுதலடையும் படி நம்மில் அவர் பொறுமையாயிருக்கும்படியும், அவரிடத்தில் விண்ணப்பிக்கிறவர்களாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.