தேவனுக்கே மகிமையுண்டாவதாக

அப்போஸ்தலர் 10:38 

நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் உண்மையாக நம் குறைகள கர்த்தரிடத்தில் அறிக்கை செய்வோமானால் அவர் தீவிரமாய் வந்து நமக்கு நன்மை செய்வார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மில் உலமாகிய அசுத்தங்களோ, மாம்ச கிரியைகளாகிய கறைகளோ இல்லாமல் நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிபபது என்னவென்றால் 

சங்கீதம் 38:1-2 

கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.

உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.

மேற்கூறிய வசனங்களில்  ( நினைவுகூருதலுக்காகத் தாவீது பாடின வியாஸ்கர் என்னும் சங்கீதம் )  நம்முடைய பாவம், அக்கிரமம், மீறுதல்கள், மதிகேடு இவைகளின் நிமித்தமாக கர்த்தர் தம்முடைய கோபத்தினாலும், உக்கிரகத்தினாலும் நம்மை தண்டிக்கும் போது, நம்முடைய மிகுந்த வேதனையால் கர்த்தரிடத்தில் நாம் எவ்விதம் மன்றாடி, விண்ணப்பம் செய்து விடுதலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை குறித்து கொடுக்கப்பட்டிருக்கிற விண்ணப்பமாவது கர்த்தாவே, என்னை கைவிடாதேயும்; என் தேவனே எனக்கு தூரமாகாதேயும்.  என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்கு சகாயம் செய்ய தீவிரியும்.  

பிரியமானவர்களே, கர்த்தரை நோக்கி; நாம் இருதயம் நொறுங்குண்டு, செய்த அக்கிரமங்கள், மதிகேடுகள் எல்லாவற்றையும் அறிக்கைப் பண்ணுவோமானால்: அவர் நம்மை கைவிடாமல் நமக்கு இரட்சிப்பாகி, நமக்காக தீவிரித்து நம் பக்கத்தில் வந்து நம்மை  சத்துருக்கள் கையில்  ஒப்புக்கொடாமல் சகாயம் செய்கிற தேவனாக வெளிப்படுவார்.   அவ்விதம்  கர்த்தர் நமக்கு நன்மை செய்வதில் தீவிரத்தில் செயல்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.