தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 5:17 

ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் உலமாகிய அசுத்தங்களோ, மாம்ச கிரியைகளாகிய கறைகளோ இல்லாமல் நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நீதிமானாகிய கிறிஸ்துவின் சிந்தையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 37:33-40 

கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.

கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன்; அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.

ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை.

நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.

அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.

நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.

கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.

மேற்கூறபட்ட வசனங்களின் விளக்கம் துன்மார்க்கன் கையில் தேவன் நீதிமானை விடுவதில்லை; நீதிமான் நியாயந்தீர்க்கபடுகையில் அவனை ஆக்கினைக்குள்ளாக தீர்ப்பதுமில்லை.  மேலும் நாம் கர்த்தருக்கு காத்திருந்து அவருடைய வழியை கைக்கொள்கிறவர்கள் பூமியை சுதந்தரித்து கொள்வதற்கு அவர் நம்மை உயர்த்துவார்; அப்போது துன்மார்க்கர் அறுப்புண்டு போவதை காண்போம்.  பின்னும் அவர் சொல்லுகிற கருத்து என்னவென்றால்  கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன்; அவன் தனக்கேற்ற நிலத்தில் முழைத்திருக்கிற பச்சை மரத்தைப் போல் தழைத்தவனாயிருந்தேன்.  ஆனாலும் அவன் ஒழிந்து போனான்; பாருங்கள், அவன் இல்லை அவனை தேடினேன், அவன் காணபடவில்லை. இதென்னவென்றால்  நம்முடைய உள்ளத்திலே துன்மார்க்க எண்ணங்கள் செழித்து வளருகிற மரங்கள் போல   வளர்ந்துக் கொண்டிருக்கும் போது, தேவன் தம்முடைய வார்த்தையாகிய அக்கினியை நமக்குள் கொளுத்துவார் ; அப்போது அது இருந்த இடமே காணாமற் போகும். கர்த்தராகிய தேவன் நம்மை நோக்கி உத்தமனை நோக்கி; செம்மையானவனை பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.  அக்கிரமக்காரர் யாவரும் ஏகமாய் அழிக்கப்பட்டு போவார்கள். அறுப்புண்டு போவதே துன்மார்க்கரின் முடிவு.  நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்.  இக்கட்டு காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.  நீதிமானுக்கு கர்த்தர் உதவி செய்து அவர்களை விடுவிப்பார்.  அவர்கள் கர்த்தரை நம்பியிருக்கிறபடியால், அவர்களை துன்மார்க்கருடைய கைக்கு தப்புவித்து இரட்சிப்பார்.  

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்கள் பிரகாரம் நம்மை தேவசமூகத்தில் நம்முடைய ஆவி, ஆத்தும சரீரம் உலகமாகிய அசுத்தங்கள் தொடாதபடியும், மாம்சமாகிய கறைகள் நம்மை பற்றாதபடியும் நம்முடைய அனுதின ஜீவிதத்தில் தேவனுடைய நல் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்களாய், அதன் பிரகாரம் நடப்போமானால் துன்மார்க்க குணங்கள் நம்மிலிருந்து அறுப்புண்டு போவதை பார்க்க முடியும்.  அப்போது நாம் தேவனுடைய நீதி நியாயத்தால் நிறையப்படுவோம்.  இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.