தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 10:7
அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய சுதந்தரம் கர்த்தருக்குள் என்றென்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் நினைத்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் துன்மார்க்கமாகிய உலகத்தாருடைய உபதேசத்தை கேட்கக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்
சங்கீதம் 37:18-22
உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.
துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.
மேற்கூறபட்ட பகுதியில் கர்த்தர் குறிப்பாக உத்தமர்கள் எவ்விதம் ஆசீர்வதிக்கபட்டிருப்பார்கள் என்று கூறுகிறார். அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் பூமியில் நிலைபெற்றிருக்கும். அவர்கள் தங்களுடைய ஆபத்து காலம் என்று வரும்போது வெட்கபட்டு போகாமலிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். ஆனால் துன்மார்க்கர்கள் அப்படியல்ல; அவர்கள் அழிந்து புகைந்து போவார்கள். மேலும் துன்மார்க்கனுடைய சுபாவம் கடன் வாங்கி செலுத்தமாட்டான். ஆனால் நீதிமான் இரங்கி கடனை திருப்பிக் கொடுக்கிறான். இவ்விதம் இரண்டு பேரையும் தேவன் உற்று பார்க்கையில் அவரால் ஆசீர்வதிக்கபட்டவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்கள் அறுப்புண்டு போவார்கள் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆசீர்வாததத்தை சுதந்தரிக்கும்படியாக உத்தமர்களாய் நடக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.