தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 139:19
தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் துன்மார்க்கமாகிய உலகத்தாருடைய உபதேசத்தை கேட்கக்கூடாது
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு காத்திருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடித்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 37:11-17
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.
ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.
சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம்; அவர்கள் வில்லுகள் முறியும்.
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.
மேற்கூறபட்ட வசனங்களில் நாம் சாந்தகுணமுள்ளவர்களாக காணப்படுவோமானால் பூமியை சுதந்தரித்து மிகுந்த மனமகிழ்ச்சியாயிருக்க முடியும். துன்மார்க்கமாக இருக்கிறவர்கள் நீதிமானுக்கு விரோதமாக தீங்கு நினைத்து, அவன் பேரில் பற்கடிக்கிறான். இதனை கர்த்தர் பார்த்து நகைக்கிறார். ஏனென்றால் அவனுடைய நாள் வருமென்று பார்க்கிறார். என்னவெனில் சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை ஆவிக்குரிய வளர்ச்சியிலிருந்து விழபண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். இதென்னவெனில் தேவன் நமக்கு தந்திருக்கிற உபதேசத்திற்கு மாறாக உலகத்தையும் ஒப்புமைபடுத்தி, துர் உபதேசத்தால் நம்முடைய உள்ளத்தை கேட்டுக்கு நேராக மாற்ற நினைப்பவர்கள் மேல் அவர்களுடைய உபதேசமாகிய பட்டயமே; அவர்கள் இருதயத்திற்குள் பாய்ந்து சென்று அவர்கள் வைத்த குறிகள் முறிக்கபடும். ஆதலால் கர்த்தர் சொல்வது அநேக துன்மார்க்கர்களுக்குள்ள செல்வ திரட்சியை பார்க்கிலும், நீதிமான்களுக்குள்ள கொஞ்சமே நல்லது. மேலும் துன்மார்க்கர்களாகிய உலகத்தாருடைய மகிமை அற்று போகும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். ஆதலால் நீதிமான்களுடைய கிரியைகளில் நாம் அனுதினம் வளரும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.