தேவனுக்கே மகிமையுண்டாவதாக
மத்தேயு 5:5
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு காத்திருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய காரியங்கள் வாய்க்க கர்த்தரின் வழியை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 37:6-10
உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.
கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் உலக கிரியைகளாகிய துன்மார்க்க உள்ளம் உள்ளவர்கள் தான் மற்றவர்களிடம் எரிச்சல், கோபம், பொறாமை இவ்விதமான பொல்லாப்போடு உள்ளமானது நிறைந்து காணப்படும். இந்த காரியங்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் என்பது விளக்கப்படுகிறது. ஆதலால் நாம் மனந்திரும்பி கிறிஸ்துவினால் இரட்சிக்கப்படுவோமானால் அந்த காரியங்கள் எல்லாம் நம்மை விசாரித்தாலும் இல்லாமல் காணப்படாமல் போய்விடும் அதனைக் குறித்து தான் பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள். கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள். இப்படியாக நாம் கர்த்தருக்கு காத்திருந்து நன்மையை சுதந்தரிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.