தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 56:10
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய காரியங்கள் வாய்க்க கர்த்தரின் வழியை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் அருளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது
சங்கீதம் 37:5-7
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.
மேற்கூறபட்ட சங்கீதத்தில் நம்முடைய வழியை கர்த்தரின் சித்தத்திற்கு ஒப்புவித்துக் கொண்டு அமர்ந்திருப்போமானால்; அவர் நீதியை வெளிச்சத்தை போலும், நம்முடைய நியாயத்தை பட்ட பகலைப் போலவும் விளங்க செய்து; அவரே நம்முடைய காரியங்களையெல்லாம் வாய்க்க செய்வார். அவ்விதம் நம்முடைய காரியங்கள் வாய்க்கும்படியாக கர்த்தரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.