தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 4:23
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் அருளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிருபையால் சூழ்ந்தவர்களாக காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 37:1-4
பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
மேற்கூறபட்ட வசனங்களில் நம்முடைய இருதயம் எப்பொழுதும் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என்றும், மற்றும் சத்தியத்தை கைக்கொள்ள வேண்டும் என்றும்; கர்த்தரை நம்பி நன்மை செய்ய வேண்டுமென்றும்; நமக்கு கஷ்டங்கள் வந்தாலும் அவரிடத்தில் எப்போதும் மனமகிழ்ச்சியாயிருப்போமானால் நம்முடைய வேண்டுதலில் நமக்கு கர்த்தர் அருள் செய்வார். இப்படி அவர் அருளை பெற்றுக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.