தேவனுக்கே மகிமையுண்டாவதாக

11கொரிந்தியர் 8:9 

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில்  கர்த்தரின் கிருபை சூழ்ந்துக்கொள்ள வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மணவாட்டி சபையாக நம்முடைய நாவில் கிறிஸ்துவின் தொனி எழும்ப வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிக்கும் பகுதி துன்மார்க்கம் (உலகத்தின் பொல்லாத கிரியைகள்) நம் உள்ளத்தில் இருந்தால் அது அக்கிரமம் என்றும், அது அருவருக்கப்படதக்கது  என்றும்; அவ்விதம் இருக்கிற ஜனங்களின் வார்த்தைகள் அக்கிரமம் மட்டுமல்ல அது வஞ்சகம் உள்ளது.  இப்படியிருக்கிறபடியால் புத்தியாய் நடப்பதையும், நன்மை செய்வதையும் விட்டு விடுவார்கள். அவர்கள் அக்கிரமத்தை படுக்கைகளிலும் யோசித்து; நல்லாதல்லாத வழியிலே யோசித்து, பொல்லாப்பையும் வெறுக்க மாட்டார்கள்.  ஆனால்  கர்த்தரின் கிருபை எவ்வளவு மேலானது என்று 

சங்கீதம் 36:4-10

அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.

கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.

உமது நீதி மகத்தான பர்வதங்கள்போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.

தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.

உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.

ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.

உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.

இப்படியிருக்கிறபடியால் நாம் தேவனிடம் நம்மை சுத்திகரித்து ஜெபிக்கும் போது பெருமைக்காரரின் ( உலகத்தார் ) கால் என் மேல் படாமலும், துன்மார்க்கரின் கை என்னை பறக்கடியாமலும் இருந்து ; அக்கிரமகாரர்கள் விழுந்து எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டு போகும்படியாக நம்மை ஒப்புக் கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.