தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 33:5
கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து இரட்சிப்பில் மகிழ்ந்திருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா சத்துருவின் கையிலிருந்து இரட்சிக்க நமக்காக தேவன் யுத்தம் பண்ணுகிறவர் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 35:6-9
அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
மேற்கூறிய வசனங்களில் கூறபட்டவைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வழக்காடுகிறவர்களின் வழி இருளும் சறுக்கலுமாயிருப்பாதாக என்றும், அப்படிபட்டவர்கள் அவரை துன்பப்படுத்தி, அவருடைய ஆத்துமாவுக்கு படுகுழி வெட்டினவர்களுடைய வாழ்வில் அவர்கள் நினையாத நேரத்தில் அவர்களுக்கு அழிவு வரவும், அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களே குழியில் விழுந்து அழிவானாக என்றும், மேலும் அவர் சொல்வது ஆத்துமா (நம்முடைய) கர்த்தரில் களிகூர்ந்து இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். பிரியமானவர்களே இப்படியாக நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக எழும்பின கிரியைகள் அழிக்கப்படும் போது நம்முடைய ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்படியாக நாம் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.