தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 2:22

அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் தேவனுடைய ஆலயமா விளங்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் எப்பொழுதும் கிறிஸ்துவின் பரிசுத்த ஸ்தலமாக விளங்க வேண்டும் என்பதனைக்குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 28:11-19 

தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்கவேண்டிய மாதிரியையும்,

ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும்,

ஆசாரியரையும் லேவியரையும் வரிசைகளாக வகுக்கிறதற்கும், கர்த்தருடைய ஆலயப்பணிவிடை வேலை அனைத்திற்கும், கர்த்தருடைய ஆலயத்து வேலையின் பணிமுட்டுகள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான்.

அவன் பற்பல வேலைக்கு வேண்டிய சகல பொற்பாத்திரங்களுக்காக நிறையின்படி பொன்னையும், பற்பல வேலைக்கு வேண்டிய சகல வெள்ளிப்பாத்திரங்களுக்காக நிறையின்படி வெள்ளியையும்,

பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளில் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய வெள்ளியையும்,

சமுகத்தப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியையும்,

முள்குறடுகளுக்கும் கலங்களுக்கும் தட்டுகளுக்கும் வேண்டிய பசும்பொன்னையும், பொன் கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும், வெள்ளிக்கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும்,

தூபங்காட்டும் பீடத்திற்கு நிறையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, செட்டைகளை விரித்துக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து,

இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதன் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல் வீடுகளும், அதன் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்க வேண்டிய மாதிரியையும் ஆவியினால் தனக்கு கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப் பிரகாரங்களும், தேவனுடைய ஆலயத்து பொக்கிஷங்களையும்,பரிசுத்தமாக நேர்ந்துக்கொள்ளபட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்க வேண்டிய மாதிரியையும, ஆசாரியரையும், லேவியரையும் வரிசைகளாக வகுக்கிறதற்கும், கர்த்தருடைய ஆலய பணிவிடை வேலை அனைத்திற்கும், கர்த்தருடைய ஆலயத்து வேலையின் பணிமுட்டுகள் அனைத்திற்குமுரிய கட்டளைகளையும் கொடுத்தான். அவன் பற்பல வேலைக்குமுரிய வேண்டிய சகல பொற்பாத்திரங்களுக்காக நிறையின்படி பொன்னையும், பற்பல வேலைக்கு வேண்டிய சகலவெள்ளிப்பாத்திரங்களுக்காக நிறையின்படி வெள்ளியையும், பொன் விளக்குத் தண்டுகளுக்கும், அவைகளின் பொன்விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்கு தண்டுக்கும், அதின் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்கு தண்டுகளில் ஒவ்வொரு விளக்கு தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய வெள்ளியையும், சமூகதப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியையும், மேலும் அதற்குகூட வேண்டியவைகளாகிய 1நாளாகமம் 28:17, 18 மேற்கூறப்பட்டவைகளின் மாதிரியையும் கொடுத்து இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான். 

பிரியமானவர்களே, தாவீது தன் குமாரனாகிய சாலொமோனிடம் கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளின் மாதிரியின்படியெல்லாம செய்ய கட்டளையிட்டு சொன்னது என்ன என்றால்; தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்து நம்மில்  ஆலயமாக விளங்குவதின் தன்மைகளையும், அவருடைய தோற்றங்கள் ஆவியில் எப்படி மகிமையுள்ளதாக இருக்கும் என்பதனையும் விளக்கும்படியாக நித்தியஜீவன் எப்படி நம்மில் மகிமையுள்ளதாக  இருக்கும் என்பதனை கருத்தில் கொண்டு மண்டபம் என்றும், பொக்கிஷ சாலைகள், வீடுகள், அறைகள், கிருபாசன ஸ்தானங்கள், சமூகதப்பங்களை வைக்கிற மேஜைகள், வெள்ளி விளக்கு தண்டுகள், கர்த்தரின் வசனமும், அதினால் உண்டாகிற மகிமையும் இவைகளையெல்லாம் கர்த்தர்  திருஷ்டாந்தப்படுத்தி மேற்கூறிய வசனங்கள் எழுதப்பட்டுள்ளது.  தேவன் அவருடைய ஆவியினால் தான் இவற்றை எல்லாம் தாவீதுக்கு ஆலயம் எவ்விதத்தில் பணியப்பட வேண்டும் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  ஆதலால் பிரியமானவர்களே நம்முடைய ஆலயம் கிறிஸ்து. இந்த ஆலயம் நம்மில் மகிமைப்படும் போது நாமே தேவனுடைய ஆலயமாக விளங்குகிறோம்.  ஆதலால் நம் உள்ளமாகிய பரிசுத்த ஸ்தலத்தில் தான் ஆலயமாகிய கிறிஸ்து மகிமைப்படுவார்.  ஆதலால் நாமே அந்த ஆலயமாக விளங்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.