தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 பேதுரு 5:6,7 

ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை குறித்து கர்த்தர் அவருடைய  வேலையில் விசாரிக்கிறவராயிருக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் தம்முடைய வேலைக்காக நியமிக்கிறதை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 27:1-3 

தங்கள் இலக்கத்தின்படி இருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு வம்சங்களின் தலைவரும், ஆயிரத்துக்குச் சேர்வைக்காரரும், நூற்றிற்குச் சேர்வைக்காரரும், இவர்களுடைய தலைவரும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருஷத்திலுண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவைச் சேவிக்கிறதற்கு வகுக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.

முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.

அவன் பேரேசின் சந்ததியாரில் சகல சேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான்.

மேற்கூறிய வசனங்களில் கர்த்தருடைய வேலைக்காக நியமிக்கப்பட்டவர்களின் இலக்கத்தின்படி இருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு வம்சங்களின் தலைவரும், ஆயிரத்துக்குக் சேர்வைக்காரரும், நூற்றிற்குச் சேர்வைக்காரரும் இவர்களுடைய தலைவரும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருஷத்திலுண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவைச் சேவிக்கிறதற்கு வகுக்கப்பட்ட வருஷங்களின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.  முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின்  குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.  அவன் பேரேசின் சந்ததியாரில் சகல சேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான். 

கர்த்தரின் வேலைக்கு நியமிக்கப்படுகிறது; எப்படியென்றால் கர்த்தர் ஒவ்வொருக்கும் கொடுத்திருக்கிற கிருபைகளின்படி வைக்கப்படுகிறார்கள். அல்லாமலும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில்  கிருபையில் வளரும் போது; யார் யார் வகுக்கப்பட்டார்களோ அவர்கள் வருஷம் தோறும்  மாறி மாறி வருவார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தார்கள்.  முதலாம் மாதம் பேரேசின் சந்ததியாரில் சகல சேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான். இவை எதற்கென்றால் கிறிஸ்து கர்த்தரின் வேலை செய்கிற யாவரையும் விசாரிக்கிறவராயிருக்கிறார் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  இப்படியாக கர்த்தர் நம்மை விசாரிக்கிவராகையால் எப்போதும் அவர் பாதம் பணியும்படி ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.