தேவனுக்கே மகிமையுண்டாவதாக

2 கொரிந்தியர் 3:8

ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய இரட்சிப்பினால் தேவ மகிமையடைதலின் விளக்கம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் நம்முடைய உள்ளத்தில் கிறிஸ்துவினால் மகிமை மேல் மகிமையடைய வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 25:1-3

மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:

ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,

கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,

மேற்கூறிய வசனங்களில் சுரமண்டலங்களாலும் தம்புருக்களாலும் , கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை தாவீதும் தேவாலய சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்து வைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்து வைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது: ராஜாவுடைய கட்டளைப் பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற ஆசாப்பின் குமாரரில் சக்கூரு, யோசேப்பு, நெதனியா, அஷாரேலா என்பவர்களும், கர்த்தரை போற்றித் துதித்து தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரனாகிய குமாரராகிய கெதலியா, சேரீ, ஏஷாயீ, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும் மற்றும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலைக்கு 

1 நாளாகமம் 25:4-8 

கொம்பைத் தொனிக்கப்பண்ண, தேவவிஷயத்தில் ராஜாவுக்கு ஞானதிருஷ்டியுள்ள புருஷனாகிய ஏமானின் குமாரரான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே.

இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.

இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.

கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள் இலக்கத்திற்கு இருநூற்றெண்பத்தெட்டுப்பேராயிருந்தார்கள்.

அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும் மாணாக்கனும், சரிசமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.

மேற்கூறப்பட்டவர்கள்  முறை வரிசைக்காக எந்த வித்தியாசம் இல்லாமல் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள். கர்த்தரின் வேலைக்காக எப்படிப்பட்டவர்களை கர்த்தர் தெரிந்தெடுக்கிறாரென்றால்  முந்தின நாளில் நாம் தியானித்தப்பகுதிகளில் 1 கொரிந்தியர் 15:39-வது வசனத்தில் நான்கு விதமான மாம்சங்களை கர்த்தர் குறிப்பிடுகிறார்.  என்னவென்றால்  நம் ஒவ்வொருவருடைய  ஆத்துமாவின் கிரியைகளின் வளர்ச்சிக்குதக்கதாக மனிதன், மிருகம், மச்சங்கள், பறவைகள் என்பவைகளை வைத்து கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.   மேலும் விதைக்கப்படுதல் என்பது ஜென்ம சரீரம் விதைத்து; ஆவிக்குரிய சரீரம் எழும்ப வேணடும்.  ஆவிக்குரிய சரீரம் எழும்புகிறது எப்போது என்றால் ஜலஸ்நானம் எடுக்கும் போது, தண்ணீரில் மூழ்கி எடுக்கவேண்டும், இது கர்த்தராகிய இயேசுவோடுக்கூட நம்முடைய பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைப்பது ஆகும்.  அப்போது கிறிஸ்துவின் ஆவியால் உயிர்ப்பிக்கப்பட்டு எழும்புகிறோம்; அப்போது ஆவிக்குரிய சரீரம் எழும்புகிறது; இதுதான் நம்முடைய பொதுவான இரட்சிப்பைக்காட்டுகிறது.  பின்னும் கூறப்படுகிற கருத்து என்றால் நாம் ஒவ்வொருவரும் எவ்விதம் விதைக்கப்படுகிறோமே அதற்கேற்ற மேனியைக் கொடுக்கிறோம். அல்லாமலும் எவ்வளவுக்கதிகமாக நல்லமேனியோடு காணப்படுகிறோமோ, அதற்கேற்ற தேவ மகிமையை அடைவோம்.  ஆதலால் தான் 

1 கொரிந்தியர் 15:41-44 

சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.

மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;

கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.

ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.

வரையிலும் குறிக்கப்படுகிறது.  ஆதலால் எல்லோரையும் ஒன்று போல் கருதி சரிசமமாய் சீட்டுப்போட்டு தெரிந்தெடுக்கிறார் என்று கர்த்தர் பழைய ஏற்பாட்டில் திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார்.  இதனை குறிப்படும் போது ஒரே கிறிஸ்துவின் ஜீவனில்  வித்தியாசமான தேவ மகிமை அவரவருடைய கிரயைகளுக்கு தக்க கிடைக்கிறது.  ஆதலால் கர்த்தரின் மகிமையின் பிரகாசிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.