தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சகரியா 8:8

அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சீயோனில் பிரவேசிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம் ஆத்துமா அழிந்து போகாதபடி காக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது 

1 நாளாகமம் 11:1-5 

இஸ்ரவேலர் எல்லாரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் கூடிவந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.

சவுல் இன்னும் ராஜாவாயிருக்கும்போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோய் நடத்திக்கொண்டுவருவீர்; என் ஜனமாகிய இஸ்ரவேலை நீர் மேய்த்து, என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்குச் சொல்லியும் இருக்கிறார் என்றார்கள்.

அப்படியே இஸ்ரவேலின் மூப்பரெல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின்பு, கர்த்தர் சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்.

பின்பு தாவீது இஸ்ரவேலனைத்தோடுங்கூட எபூசாகிய எருசலேமுக்குப் போனான்; எபூசியர் அத்தேசத்தின் குடிகளாயிருந்தார்கள்.

அப்பொழுது எபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.

மேற்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேலர் எல்லாரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் ஓடி வந்து நாங்கள் உம்முடைய எலும்பும், உம்முடைய மாம்சமானவர்கள்.  சவுல் இன்னும் ராஜாவாயிருக்கும் போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டு போய்; நடத்திக் கொண்டு வருவீர்; என் ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் தலைவனாயிருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்முடன் சொல்லியும் இருக்கிறார்கள் என்றார்.  அந்தபடியே இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலிருக்கும் தாவீதினிடத்தில் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்ட பின்பு, கர்த்தர் சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். அதற்கு பின்பு தாவீது இஸ்ரவேலனைத்தோடுங்கூட எபூசாகிய எருசலேமுக்கு போனான்; எபூசியர் அத்தேசத்தின் குடிகளாயிருந்தார்கள்.  எபூசின் குடிகள் தாவீதை நோக்கி; நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை என்றார்கள்; ஆனாலும் சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று. 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளவைகள் நம் ஆத்துமாவின் இரட்சிப்பைக் குறித்து கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.   தாவீதின் நகரமாகிய சீயோனை குறித்து கர்த்தர் சொல்கிறார்; சீயோன் கோட்டையை தாவீது பிடித்தான் என்று எழுதப்பட்டிருக்கிறது என்னவென்றால் அது கிறிஸ்து என்பதும், அவர் தான் எருசலேம் என்பதும் நமக்கு விளக்கப்படுகிறது.  அவ்விதமாக நம் வாழ்வில் கிறிஸ்து இரட்சகராக விளங்கினால் நாம் அவரோடு உடன்படிக்கைப்பண்ணுகிறோம்.  அவரோடு உடன்படிக்கை செய்தால் நாம் அவருடைய எலும்பும், மாம்சமுமாயிருக்கிறோம். அப்படியாக நாம் கர்த்தரால் பெற்ற அபிஷேகத்தினால்  நம் எல்லாருடைய வாழ்விலும் இருக்கிற அந்நிய ஜாதியாகிய பொல்லாத கூட்டம், நம் ஆத்துமாவை குறித்து கிறிஸ்துவுக்குள் பிரவேசிப்பதில்லை என்று நமக்கு விரோதமாக எழும்பினாலும் கிறிஸ்துவே இரட்சகராகவும், அவரே தலைவராயிருப்பார்.  இவ்விதமாக நம்மை எல்லாவற்றிலும் ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.