தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 138: 6 

கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு எல்லாவற்றிலும் உயர்ந்தவரும், சிறந்தவரும், புகழபடதக்கவருமாகிய கர்த்தராகிய கிறிஸ்து.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் சுகத்தை விரு்புகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1நாளாகமம் 9:1-3 

இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.

தங்கள் காணியாட்சியிலும் தங்கள் பட்டணங்களிலும் முன் குடியிருந்தவர்கள் இஸ்ரவேலரும் ஆசாரியரும் லேவியரும் நிதினீமியருமே.

யூதா புத்திரரிலும், பென்யமீன் புத்திரரிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் புத்திரரிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால்,

மேற்கூறப்பட்ட வசனங்களில்  இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்கள் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம் , பாபிலோனுக்கு சிறைப்பிடித்துக் கொண்டுப்போகப்பட்டார்கள்.  தங்கள் காணியாட்சியிலும், தங்கள் பட்டணங்களிலும் முன் குடியிருந்தவர்கள் இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும், நிதினீமியருமே.  யூத புத்திரரிலும், பென்யமீன் புத்திரரிலும், எப்பீராயீம் மனாசே என்பவர்களின் புத்திரரிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால் 

1 நாளாகமம் 9: 4-6 

யூதாவின் புத்திரனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் குமாரனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் குமாரன் ஊத்தாய்.

சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவன் பிள்ளைகளும்,

சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவன் சகோதரராகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேருமே.

இவர்கள் அறுநூற்று தொன்னூறு பேருமே.  பென்யமீன் புத்திரர்கள் 

1 நாளாகமம் 9: 7-9 

பென்யமீன் புத்திரரில் அசெனூவாவின் குமாரனாகிய ஓதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு.

எரோகாமின் குமாரன் இப்னெயா; மிக்கிரியின் குமாரனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் குமாரனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்;

தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரராகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனுஷர் எல்லாரும், தங்கள் பிதாக்களின் வம்சத்திலே பிதாக்களின் தலைவராயிருந்தார்கள்.

மேற்கூறப்பட்டவர்கள் எல்லாருமே பிதாக்களின் வம்சத்திலே பிதாக்களின் தலைவராயிருந்தார்கள்.  ஆசாரியர்கள் 

1 நாளாகமம் 9:10,11 

ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.

அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்கர்த்தன்.

இவர்கள் தேவாலயத்து விசாரணை கர்த்தன்.  மேலும் 

1 நாளாகமம் 9:12,13 

மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மெரின் குமாரனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் குமாரனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,

அவர்கள் சகோதரரும், தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரான ஆயிரத்து எழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்துக்கடுத்த பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாயிருந்தார்கள்.

மேற்கூறப்பட்டவர்களும், தங்கள் பிதாக்களின் வம்சதலைவரான ஆயிரத்து எழுநூற்று அறுபது பேர் தேவாலயத்துக்கடுத்த பணிவிடைக்கு திறமையுள்ளவர்களாயிருந்தார்கள். 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும்போது, கர்த்தர்; கிறிஸ்துவின் சரீரம் நம்மில் உயிர்தெழுவதற்குமுன்பு, சாலொமோனால் கர்த்தர் கட்டின தேவாலயத்தில் பன்னிரண்டு கோத்திர பிதாக்களின் வம்சமும் எருசலேமில் இடம்பெற்று வருகிறதை வாசிக்க முடிகிறது.  யூத கோத்தித்தார் தாங்கள் செய்த துரோகத்தினால் பாபிலோனுக்கு சிறைப்பிடிக்கப்படுகிறது என்றால், நமக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  எப்படியெனில் நாம் தேவ ஆவியில் நடத்தப்பட்டும், உள்ளமானது உலகத்தின் பழக்கவழக்கங்களுக்கு அடிமைப்படுவோமானல், நம்மை கர்த்தர் பாபிலோனாகிய உலகத்தின் அதிபதியாகிய சாத்தானின் கரத்தில் சிறைப்பிடித்து கொண்டுபோகும்படி ஒப்புக்கொடுக்கிறார்.  ஆதலால் கிறிஸ்துவின் ஆவியினால் உயிர்பிக்கப்பட்டபின் உலகமாகிய கறைகளால் வஞ்சிக்கப்படாதபடி ஜாக்கிரதையாக காணப்பட வேண்டும்.  மற்றும் கர்த்தர் நம் ஆத்துமாவை உயிர்பித்த பின்பு எல்லாருக்கும் தலைவரும், விசாரணை கர்த்தாவும், எல்லாவுமே நமக்குள் கிறிஸ்துவாக விளங்குகிறார்.  இவ்விதமாக நம்மை நாம் முழுமையும் தாழ்மைப்படுத்தி, கிறிஸ்து எல்லாருக்கும் எல்லாவற்றிலும், எப்பொழுதும் உயர்ந்தவராயிருக்கும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.