தேவனுக்கே மகிமையுண்டாவதாக

உபாகமம் 33:12

கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவுக்குள்ளாக சத்தியத்தை விளம்ப வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கலந்த துர் உபதேசம் இல்லாமல் கர்த்தரோடு வாழ வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

1நாளாகமம் 8:1-2 

பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,

நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.

மேற்கூறப்பட்ட ஐந்து பேரும் பென்யமீன் குமாரர்கள்.  பேலாவுக்கு இருந்த குமாரர் 

1நாளாகமம் 8:3-5 

பேலாவுக்கு இருந்த குமாரர், ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.

அபிசுவா, நாமான், அகோவா,

கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் எழுதப்பட்ட பெயர்கள் பேலாவுக்கு இருந்த குமாரர்கள். கேபாவின் குடிகளுக்கு தலைவராயிருந்து, இவர்களை மகனாத்துக்கு அழைத்துக்கொண்டு போனவர்கள் நாமான், அகியா, கேரா என்பவர்களே. கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போன பின்பு ஊசாவையும், அகியூதையும்  பெற்றான்.  பின்பு அவர்களை அனுப்பி விட்ட பின்பு சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம் பாராள் என்னும் தன் பெண் ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகள் தவிர

 1நாளாகமம் 8:9-12 

தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலே யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,

எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.

 ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.

எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.

இதில் எழுதப்பட்டவர்கள் அதன் கிராமங்களையும் உண்டாக்கினவர்கள்.  மேலும்

 1நாளாகமம் 8:13 

பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்.

மேற்கூறப்பட்டவர்கள் காத்தின் குடிகளை ஓட்டி விட்டார்கள்.  அல்லாமலும் பென்யமீனைக்குறித்து

 ஆதியாகமம் 49:27 

பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான்.

அவன் பீறுகிற ஓநாய்; காலையிலே தன் இரையை பட்சிப்பான்,மாலையில் தான் கொள்ளையிட்டதை பங்கிடுவான். இவனை குறித்து கர்த்தர் சொல்கிறது, சத்தியத்திற்கு மாறான செயல்களை தங்களை விட்டு துரத்துவான்.  தனக்கு விரோதமாக எழும்புகிற துர் கிரியை அழித்து, நற் கிரியைகளை பெற்றுக்கொண்டு, அதனை சாயங்காலத்தில் சபைக்கு விளம்புவான்.  ஆதலால் அவன் கர்த்தருக்கு மிகவும் பிரியமானவன்.  இப்படியாக நாமும் கிறிஸ்துவினால் நமக்கு தருகிற சத்திய வசனத்தை ஏற்றுக்கொண்டு கர்த்தருக்கு பிரியமானவர்களாக வாழும்படியாக  நம்மை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.