தேவனுக்கே மகிமையுண்டாவதாக

உபாகமம் 33:23 

நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவனுக்கு மட்டும் அடிமைகள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சத்துவத்தின் வல்லமையல் பலப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்  1 நாளாகமம் 7:13-ம் வசனம் நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார்கள் நான்கு பேர்களுடைய பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் பென்யமீனின் குமாரரான மனாசேயின் புத்திரரின் வம்சங்கள் 

1 நாளாகமம் 7:14-19

மனாசேயின் புத்திரரில் ஒருவன் குலஸ்திரீயினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவன் மறுமனையாட்டியாகிய அராமிய ஸ்திரீயினிடத்தில் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.

மாகீர் மாக்காள் என்னும் பேருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியை விவாகம்பண்ணினான்; மனாசேயின் இரண்டாம் குமாரன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்குக் குமாரத்திகளிருந்தார்கள்.

மாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள்; இவன் சகோதரன் பேர் சேரேஸ்; இவனுடைய குமாரர் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.

ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர்.

இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.

செமிதாவின் குமாரர், அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.

வரையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவன் குலஸ்திரீயினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவன் மறுமனையாட்டியாகிய அராமிய ஸ்திரீயினிடத்தில் கிலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.  இவ்விதமாக மனாசேயின் புத்திரர்கள் மாமிசத்திற்கு அடிமைகளாகயிருந்தார்கள் என்பதும் எழுதப்பட்டிருக்கிற வசனங்களில் நமக்கு புரிய வருகிறது.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் நப்தலி விடுதலை பெற்ற பெண்மான் என்பதும், அவள் இன்பமான வசனங்களை வசனிப்பாள் என்பதும் நம் ஆத்துமா கிறிஸ்துவினால் இரட்சிக்கப்படும் போது இப்படியாகும் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  மேலும் 

யோசுவா13: 29-32 

மனாசே புத்திரரின் பாதிக் கோத்திரத்துக்கும் மோசே அவர்கள் வம்சத்துக்குத்தக்கதாகக் கொடுத்தான்.

மகனாயீம் துவக்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று.

பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் பாதிபேருக்கு அவர்களின் வம்சங்களின்படியே கொடுத்தான்.

மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையிலிருக்கிற மோவாபின் சமனான வெளிகளில் சுதந்தரமாகக் கொடுத்தவைகள் இவைகளே.

மேற்கூறப்பட்ட வசனங்களில் எழுதப்பட்டவைகள் மனாசேயின் வம்சத்திற்கு மோசே; கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையிலிருக்கிற மோவாபின் சமனான வெளிகளில் சுதந்தரமாக கொடுத்தவைகள்.  இவைகளின் விளக்கம் என்னவென்றால் மறுமனையாட்டிகளால் பெற்றெடுக்கிற குழந்தைகள் மாம்சத்திற்கும், உலகப்பொருளுக்கும் அடிமைகளாக, பிசாசினால் வஞ்சிக்கப்படுகிறவர்கள் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  ஆதலால் நமக்கு ஒரே இரட்சகர் உண்டு; அவர் தான் கிறிஸ்து.  ஆதலால் அவருடைய இரத்தத்தால் மீட்கப்பட்டு கிறிஸ்துவுக்கு அடிமையாகவும், அவருடைய ஆவியினால் நடத்தப்படுவோமானால் நாம் இரட்சிக்கப்படுகிறோம்.  இப்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.