தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஆதியாகமம் 49:27 

பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சத்துவத்தின் வல்லமையில் பலப்படவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரமாகிய கூடாரம் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 7: 6-12 

பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.

பேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்.

பெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர்.

தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.

யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.

யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரான பராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.

சுப்பீமும், உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.

மேற்கூறிய வசனங்களில் கோத்திர பிதாக்களில் வம்ச தலைவர்களில் யுத்தத்திற்கு போக தக்க சேவகரான பராக்கிரமசாலிகளின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது.  ஏனெனில் இதன் திருஷ்டாந்தம் என்னவெனில் நம் ஆத்துமா பிசாசினோடு எதிர்த்து நிற்கத்தக்க சர்வாயுதவர்க்கம் தரித்து பிசாசினோடு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனை கர்த்தர் விளக்குகிறார்.   ஆதலால் பென்யமீனைக் குறித்து 

உபாகமம் 33:12

பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களால் நாம் எப்போதும் பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நின்று கிறிஸ்துவை விட்டு பிரிந்து பிசாசினால் வஞ்சிக்கப்படாமல் என்றென்றும் அவர் நம்மில் வாசமாயிருக்கும்படியும், நாம் அவரோடு சுகமாய் தங்கியிருக்கும்படியாகவும் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.