தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 16:33 

சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரால் பலவான்களின் நடுவே சிக்கறுக்கிறர்களாக  இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு கிறிஸ்து அடைக்கல பட்டணமாக விளங்குகிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1நாளாகமம் 6:61-81 

கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக் கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.

கெர்சோமின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது.

மெராரியின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு பட்டணங்கள் இருந்தது.

அப்படியே இஸ்ரவேல் புத்திரர் லேவியருக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால்,

சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திலும், பேர்பேராகச் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.

கோகாத் புத்திரரில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.

எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,

யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும்,

ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,

மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் புத்திரரிலுள்ள மற்ற வம்சங்களுக்கு இருந்தது.

கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,

இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபிராத்தும் அதின் வெளிநிலங்களும்,

ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும்,

ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும்,

உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும்,

நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவிலிருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.

மெராரியின் மற்றப் புத்திரருக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,

எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,

கேதேமோத்தும் அதின் வெளிநிலங்களும், மேப்பாத்தும் அதின் வெளிநிலங்களும்,

காத் கோத்திரத்திலே கீலேயாத்திலுள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும்,

எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ஒவ்வொரு வம்சத்து புத்திரருக்கு  கோத்திரத்தின் படி பட்டணங்களும், வெளி நிலங்களும் சீட்டின்படி கொடுக்கப்படுகிறது. 

பிரியமானவர்களே,  சபைக்குள் வராதபடியும், இரட்சிப்பை பற்றி அறியாதபடியும் வாழ்நதுக் கொண்டிருக்கிற  ஜனங்கள், சாத்தானுடைய செயலால் சிக்குண்டு பலவித கஷ்டங்களில் அகப்பட்டு இருக்கிற ஜனங்கள் தங்களை கெடுத்துக்கொள்ளும் முன்பாக கர்த்தரால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாகிய நாம்  இரட்சிப்பை பிரசித்தம் பண்ணி அவர்களை கர்த்தருக்கென்று ஆதாயப்படுத்தி சபைக்குள் வரவழைக்க வேண்டும்.  இதனைக் குறித்து  தான் கர்த்தர் சீட்டுபோட்டுதல் பலவான்கள் நடுவே விரோதங்களை ஒழித்து சிக்கறுக்கும் என்கிறார். இதனால் தான் கர்த்தரால் நமக்கு மேற்கூப்பட்ட வசனங்கள் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  இப்படியாக நம்மை கர்த்தருக்காக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.