தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 84: 3

என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு கிறிஸ்து அடைக்கலம். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆலயத்தின் பணிவிடை வேலைக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம்   தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 6:50-53  

ஆரோனின் குமாரரில் எலெயாசார் என்பவனுடைய குமாரன் பினேகாஸ்; இவன் குமாரன் அபிசுவா.

இவன் குமாரன் புக்கி; இவன் குமாரன் ஊசி; இவன் குமாரன் செராகியா.

இவன் குமாரன் மெராயோத்; இவன் குமாரன் அமரியா; இவன் குமாரன் அகித்தூப்.

இவன் குமாரன் சாதோக்; இவன் குமாரன் அகிமாஸ்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் எழுதப்பட்டவர்கள் ஆரோனின் வம்சத்தார்.  அவர்கள் பேட்டைகளின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் வாசஸ்தலங்களாவன: கோகாத்தயரின் வம்சமான ஆரோனின் புத்திரருக்கு விழுந்த சீட்டின்படியே, யூத தேசத்திலிருக்கிற  எப்ரோனையும், அதை சுற்றியிருக்கிற வெளி நிலங்களையும் கொடுத்தார்கள்.  அந்த பட்டணத்தின் வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு கொடுத்தார்கள்.  இப்படியே ஆரோன் புத்திரருக்கு எப்ரோன் எனனும் அடைக்கல பட்டணங்களில் ஒன்றையும், லிப்னாவையும் அதின் வெளி நிலங்களையும், யாத்தீரையும், எஸ்தெமோவாவையும் அவற்றின் வெளிநிலங்களையும், மேலும் வெளிநிலங்களாகியவைகள்  

1நாளாகமம் 6:58,59 

ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,

ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்சேமேசையும் அதின் வெளிநிலங்களையும்,

பென்யமீன் கோத்திரத்திலே 1நாளாகமம் 6:60 

பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.

மேற்கூறிய வசனங்களில் வெளிநிலங்களும் பட்டணங்களும் எழுதப்பட்டுள்ளது.

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தரின் சபைக்குட்படாத ஜனங்களை திருஷ்டாந்தப்படுத்தி வெளிநிலங்களும் பட்டணங்களும் என்று கூறபட்டுள்ளது. ஏனென்றால் வெளிநிலங்கள் என்றாலும், பட்டணங்களாக எழுதப்பட்டிருந்தாலும் எல்லாரும் கிறிஸ்துவின் சரீரத்துக்குள்ளாக வர வேண்டும்.  அப்படி கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்படுவார்களானால் அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாகவும், அவரே அவர்களுக்கு அடைக்கலமாகவும் விளங்குகிறார். இப்படியாக நாமும் நம்மை கிறிஸ்துவுக்குள்ளாக காத்துக்கொள்ள ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.