தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 101:6   

தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சிறைபடுத்தபடாமல் நம்மை காக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பின் மாற்றம் அடையாமல் ஜாக்கிரதையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 6:1 

லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் லேவியின் குமாரர் கெர்சோன், கோகாத் மெராரி என்பவர்கள். மேலும் கோகாத்தின் குமாரர் 

1 நாளாகமம் 6:2-14  

கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.

அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.

எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்.

அபிசுவா புக்கியைப் பெற்றான்; புக்கி ஊசியைப் பெற்றான்.

ஊசி செராகியாவைப் பெற்றான்; செராகியா மெராயோதைப் பெற்றான்.

மெராயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.

அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.

அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான்.

யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் இவன்தான்.

அசரியா அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.

அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் சல்லூமைப் பெற்றான்.

சல்லூம் இல்க்கியாவைப் பெற்றான்; இல்க்கியா அசரியாவைப் பெற்றான்.

அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான்.

வரையிலானவர்கள் எல்லாரும் கோகாத்தியரின் வம்சங்கள் இவைகளே.  கடைசியாக செராயா யோசதாக்கைப் பெற்ற பின்பு, கர்த்தர் நேபுகாத்நேச்சாரைக் கொண்டு;  யூத ஜனங்களையும், எருசலேமியரையும் சிறைபிடித்துக்கொண்டுப் போகபடும்படி செய்து, யோசதாக்கும் சிறைபட்டுபோனான்.  

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது, கர்த்தர் யூத ஜனங்களையும், எருசலேமியரையும், அதோடுகூட லேவியின் வம்சத்தானாகிய யோசதாக்கும்  பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சரால் சிறைப்படுத்துகிறார்கள் என்றால், நம்முடைய வாழ்வில் நாம் எப்போதானாலும் கர்த்தரின் கட்டளைகளை மீறும் போது நம் உள்ளம் உலகத்தையும், உலகத்திலுள்ளதையும் வாஞ்சிக்கிறது.  அப்போதே கர்த்தர் நம் ஆத்துமாவை சிறையிருப்புக்குட்படுத்துகிறார்.  ஆதலால் நம் உள்ளம் எப்போதும் தேவனுக்கேற்றவைகளை சிந்திக்க வேண்டும்.  இப்படியாக நம்மில் யாரும் சிறைப்பட்டு போகாதபடியாக கர்த்தருக்காக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.