தேவனுக்கே மகிமையுண்டாவதாக

2 பேதுரு 2:20

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பின் மாற்றம் அடையாமல் ஜாக்கிரதையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் முதற்பலன்களாக வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1நாளாகமம் 5:21-23 

அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனுஷரில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள்.

யுத்தம் தேவனால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகுமட்டும் இவர்களுடைய ஸ்தலத்திலே குடியிருந்தார்கள்.

மனாசேயின் பாதிக்கோத்திரத்துப் புத்திரரும் அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான்தொடங்கிப் பாகால் எர்மோன்மட்டும், செனீர்மட்டும், எர்மோன் பர்வதமட்டும் பெருகியிருந்தார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தவர்களின் விண்ணப்பத்தை கர்த்தர் கேட்டருளுகிறார். என்னவென்றால் ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதி கோத்திரத்தாரிலும் படைக்கு போகதக்க சேவகர் நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபது பேராயிருந்தார்கள்.  அவர்கள் தாங்களோடு யுத்தம் பண்ணினவர்களுடைய மிருக ஜீவன்களாகிய ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனுஷரில் லட்சம் பேர்களையும் பிடித்தார்கள்.  யுத்தம் தேவனால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்; தாங்கள் சிறைபட்டு போகுமட்டும் இவர்களுடைய ஸ்தலத்திலே குடியிருந்தார்கள். மனாசேயின் பாதி கோத்திரத்து புத்திரரும், அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான் தொடங்கிப் பாகால் எர்மோன் மட்டும், செனீர் மட்டும், எர்மோன் பர்வதம் மட்டும் பெருகியிருந்தார்கள்.  அல்லாமலும் அவர்கள் தங்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய 

1நாளாகமம் 5:24 

அவர்கள் தங்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரரான மனுஷரும் பேர்பெற்ற தலைவருமாயிருந்தார்கள்.

மேற்கூறப்பட்டவர்கள் பராக்கிரம வீரரான மனுஷரும் பேர்பெற்ற தலைவருமாயிருந்தார்கள்.  அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனுக்கு துரோகம் பண்ணி, தேவன் அவர்களுக்கு முன்பாக அழித்திருந்த தேசங்களின் தேவர்களை பின் பற்றி சோரம் போனார்கள்.  ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜவாகிய பூலின் ஆவியையும், தில்காத் பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே அவன் ரூபனியரும், காத்தியரும், மனாசேயின் பாதி கோத்திரத்தாருமாகிய அவர்களை சிறைபிடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறது போல, ஆலாவுக்கும், ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசேன் ஆற்றங்கரைக்கும் கொண்டு போனார்கள். 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்போமானால் கர்த்தர் நம் விண்ணப்பத்தைக் கேட்டு, நம் சத்துருக்களிடத்தில் நமக்காக யுத்தம் செய்து வெற்றியை நடப்பித்து நம் தேசத்திலே குடியிருக்கும்படி செய்வார் ( நாம் கர்த்தரை விட்டு தூரம் போகாதபடி காப்பார்).    அவ்விதமாக கர்த்தரை பற்றியிருப்போமானால் கர்த்தரின் ஜனங்கள் எல்லாயிடமும் பெருகிக்கொண்டிருப்பார்கள்.  ஆனால்  தேவனுக்கு துரோகம் பண்ணி கர்த்தர் நம்மை விட்டு மாற்றின கிரியைகளை மீண்டும் செய்வோமானால்; நம் உள்ளத்தில் அசீரிய ராஜாவின் ஆவியை எழுப்பி விடுகிறதினால், நம் ஆத்துமா சிறைபிடித்துக் கொண்டு போகப்படுகிறது.  அதென்னவெனில் நம் உள்ளமானது உலக ஆடம்பரங்ளுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும்.  இப்படியாக பலபல சிந்தனைகள் உள்ளத்தை கவர்ச்சித்து கர்த்தரை விட்டு நம்மை தூரம் போக செய்யும்.  இவ்விதமாக கர்த்தரின் கோபம் நம்மை பின் தொடரும்.  ஆதலால் கர்த்தருக்கு எந்த விதத்திலும் துரோகம் பண்ணாமல் ஜாக்கிரதையாயிருக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.