தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 13:5 

நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்துவின் சிங்காசனம் (கிருபை) நிலைத்திருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய செயல்கள் வானத்திலிருந்து வந்த கர்த்தருக்குரியவைகளாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 2:13-15 

ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,

நெதனெயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும்,

ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.

மேற்க்கூறபட்ட வசனங்களில் ஈசாயின் குமாரர்களில் ஏழாம் குமாரனாக தாவீதும்; அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர்; அபிசாய், யோவாப்,ஆசகேல் என்னும் மூன்று பேர்.  அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்;அமாசாவின் தகப்பன் இஸ்மவேலனாகிய யெத்தேர் என்பவன்.  மேலும் தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்தவர்கள் 

1 நாளாகமம் 3:1-4 

தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.

கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன்.

அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன்.

இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.

அல்லாமலும் தாவீதுக்கு எருசலேமில் பிறந்தவர்கள் 

1 நாளாகமம் 3:5-9 

எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,

இப்கார், எலிசாமா, எலிப்பெலேத்,

நோகா, நேபேக், யப்பியா,

எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே.

மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.

மேற்குறிப்பிட்ட ஒன்பது பேரும் எருசலேமில் பிறந்தவர்கள்.  மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர். மேலும் 

1நாளாகமம் 3:10-24 

சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.

இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.

இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம்.

இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.

இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.

யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.

யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.

கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,

மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.

பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.

அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேருமே.

அனனியாவின் குமாரர், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா.

செக்கனியாவின் குமாரர், செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.

நெயாரியாவின் குமாரர், எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர்.

எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர்

சாலொமோனிலிருந்து அவர்கள் வம்சங்கள் எழுதப்பட்டுள்ளது.  

மேற்கூறப்பட்டுள்ளவைகள் நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று எழுதப்பட்டுள்ளது.  என்னவென்றால் இவர்களில் முக்கியமானவர்கள் ராஜஸ்தானம் வகிக்கிறார்கள். இவை நம் ஆத்மீக ஜீவிதமும், அதிலிருந்து நாம் நல்லவைகள் செய்தால் ஆத்துமா தேவனோடு ஐக்கியப்பட்டு வளருகிறதும், கர்த்தருக்கு பொல்லாப்பானவை செய்தால் ராஜஸ்தானம் நம்மிலிருந்து பிடுங்கப்படுவதும், மற்றும் சத்துருவின் கையில் கர்த்தர் நம்மை ஒப்புக்கொடுப்பதும், நம் ஆத்துமா சத்துருவினால் நெருக்கப்படுவதும்  திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  ஆதலால் பிரியமானவர்களே, இதனை குறித்து தான் இராஜாக்கள் புஸ்தகத்தில் தியானித்துக்கொண்டிருந்தோம்.  ஆதலால் நாம் கர்த்தருக்கு செம்மையானவைகளை செய்தால் கிறிஸ்துவின் சிங்காசனம் நம்மில் நிலைத்திருக்கும்.  இது நிலைத்திருக்க வேண்டுமானால் கர்த்தரின் நீதியும் நியாயத்தையும் நாம் நடப்பிக்கிறவர்களாக இருக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.