தேவனுக்கே மகிமையுண்டாவதாக

செப்பனியா 1:8 

கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சிறையிருப்புக்கு திரும்பக் கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 25: 22-30 

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.

பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.

அப்பொழுது கெதலியா அவர்களுக்கும் அவர்கள் மனுஷருக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.

ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.

அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய ஜனங்கள் யாவரும் சேனாபதிகளும் கல்தேயருக்குப் பயந்ததினாலே எழுந்து புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில்மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்த ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,

அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் நித்தம் தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான்.

அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் கொடுக்கப்பட்டுவந்தது.

மேற்கூறப்பட்ட வசனங்களில் யூதேயா தேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின் மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.  இதனை கேட்ட சகல இராணுவ சேர்வைக்காரரும், அவர்களுடைய மனுஷரும் கேட்ட போது, அவர்கள் மிஸ்பாவிலிருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில் நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், தன்கூமேத்தின் குமாரன் செரயாவும், மகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும், அவர்கள் மனுஷருமே.  அப்போது கெதலியா அவர்களுக்கு ஆணையிட்டு கூறியதாவது; நீங்கள் கல்தேயரை சேவிக்க பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவை சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும்.  பின்பு 

2 இராஜாக்கள் 25:25-26 

ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.

அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய ஜனங்கள் யாவரும் சேனாபதிகளும் கல்தேயருக்குப் பயந்ததினாலே எழுந்து புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் பத்து மனுஷரோடே இஸ்மவேல் வந்து கெதலியாவையும், கல்தேயரையும் வெட்டிக்கொன்றுப்போட்டதால்,சிறியோரும், பெரியோருமாகிய  ஜனங்கள் எல்லாரும் சேனாபதிகளும், கல்தேயருக்கு பயந்ததினாலே எழுந்து எகிப்திற்கு புறப்பட்டு போனார்கள்.  யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே, ஏவில் மெரெதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைசாலையிலிருந்து புறப்படபண்ணி, அவன் தலையை உயர்த்தி, அவனோடே அன்பாய் பேசி அவனுடைய சிங்காசனத்தை தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின்  சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து , அவனுடைய சிறைசாலை வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் தனக்கு முன்பாக போஜனம் பண்ணும்படி செய்தான்.  அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவின் கட்டளையான அனுதினத் திட்டத்தின்படி, அனுதினமும் அவனுக்குக்கொடுக்கப்பட்டது. 

பிரியமானவர்களே,  மேற்க்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் நாம் பாபிலோனாகிய உலகத்தால் சிறைப்படுத்தப்பட்டால் நாம் பெற்ற கர்த்தரின் அபிஷேகம் நஷ்டபடும்.  மேலும் உலக ஆசீர்வாதங்கள் நம்மை வஞ்சித்து விடும்.  இப்படி தான் அநேகர் அது கர்த்தர் தருகிற ஆசீர்வாதம் என்று சொல்லி, தங்கள் வாழ்க்கையை வசனத்தின்படி சீர்திருத்திக்கொள்ளாமல் உலகத்தின் வேஷங்களுக்கு ஒப்பாகவே நடப்பார்கள்.  அவர்கள் ஒருநாளும் அவற்றிலிருந்து மனம் மாறாமல், தங்களுக்கு கிடைக்கிற உலகத்தின் ஆசீர்வாதங்களினாலே, பாதாளத்திற்கு போகிறோம் என்று தெரியாமல் போய்க்கொண்டிருப்பார்கள். இதற்குதான் கர்த்தர் முன்கூறப்பட்டிருக்கிற வசனங்களை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  மேலும் நம் வாழ்நாள் முழுவதும் மறுதேசத்து வஸ்திரமாகிய பாபிலோனிய வஸ்திரத்தையும் உடுத்துவித்து, ராஜபோஜனமும் தந்து சாத்தான் நம்மை வஞ்சித்து அவன் வசமாக்கிவிடுவான்.  இவ்விதமாக நாம் ஏமாந்து போகாமல் ஜாக்கிரதையாக நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுபோம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.