தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 10: 20 

அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்தும இரட்சிப்புக்கு பின் கிறிஸ்துவின் கிருபையால் நம் ஆத்துமா வஞ்சிக்கப் படாமல் காக்கப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் காக்கப்படும்படியாகவும், சத்துருவினால் கர்த்தர் நம்மை சிறைப்படுத்தாமலும் இருக்கும்படியாக கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்படிய வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 19: 29-31 

உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.

யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.

மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தர் ஏசாயா மூலம் அசீரியா ராஜாவுக்கு சென்ன காரியங்களில் அவனை திருப்பிக்கொண்டு போவேன் என்கிறார் என்றால் கர்த்தரின் பட்டணத்தை அசீரியனால் முழுமையும் அழிக்க விடமாட்டேன் என்கிறார்.  அதற்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால் இந்த வருஷத்தில் தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்தில் தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள். மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து திராட்சத்தோட்டங்களை நாட்டி அவைகளின் கனிகளை புசிப்பீர்கள்.  யூதா வம்சத்தில் தப்பி மீந்திருக்கிறவர்கள் யாவரும் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிக்கொடுப்பார்கள்.  மீதியாயிருப்பவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலிருந்தும் புறப்படுவார்கள்; சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் வைராக்கியம் இதை செய்யும்.  ஆகையால் கர்த்தர் அசீரியரின் ராஜாவை குறித்து சொன்னது 

2 இராஜாக்கள் 19:32-34 

ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை.

அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.

என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

மேற்கூறப்பட்டவைகளை கர்த்தர் அசீரிய ராஜாவை குறித்துச் சொன்னப்பிறகு அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 19:35 

அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.

இவ்விதமாய் அசீரியர்கள் செத்த பிரேதங்களாய் கிடந்தார்கள்.  அப்பொழுது அசீரிய ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பி போய் நினிவேயில் இருந்து விட்டான்.  பின்பு அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துக்கொள்கிற போது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனை பட்டயத்தினால் வெட்டிப்போட்டு ஆரராத் தேசத்திற்கு தப்பிஓடிப்போனார்கள்.  அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.  

பிரியமானவர்களே, முந்தின கர்த்தரின் வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது கர்த்தர் உலகத்தின் அலங்காரங்கள் எல்லாவற்றிலிருந்து நம்மை மீட்டெடுக்கும்  போது கர்த்தருக்கு என்று ஒரு சிறு கூட்டம் ஆத்துமாக்கள் மட்டும் உண்டாயிருக்கும்.  என்னவென்றால் அசீரியனால் (உலக அலங்காரத்தால்) தாராளமான கூட்டம் அதன் பின்னால் போவார்கள்.  அவர்கள் அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்கள்; கர்த்தருக்கு கீழ்படியாதவர்கள் அதனாலே அழிந்து போவார்கள்.  பின்பு  மீந்திருக்கிறவர்கள் கர்த்தரின் சகல வார்த்தைகளுக்கும் கீழ்படிந்து  சீயோன் மலையிலிருந்தும், எருசலேமிலிருந்தும்  (கிறிஸ்துவினால் விசுவாச யாத்திரை புறப்படுவார்கள்.  இப்படியாக கர்த்தர் ஆத்துமாக்களை இரட்சிக்கும் போது, அந்த நகரம் சீயோன் என்றும் எருசலேம் என்னும் நகரமாகும்.  அப்போது கர்த்தர் அசீரியனை அந்த நகரத்தில் பிரவேசிக்க விடாமல் திருப்பி அனுப்புகிறார். பின்பு இரட்சிக்கப்பட்ட தம்முடைய பிள்ளைகளுக்கு ஆதரவாயிருந்து அசீரிய கிரியைகளாகிய சத்துருவை சங்கரிக்கிறார்; அதன் பின்பு உண்மையாய் கர்த்தரை சார்ந்து வாழமுடியும்.    ஆதலால் நாம் கவனத்தோடு கர்த்தரின் சத்தம் கேட்டு அவர் சித்தம் செய்யாவிட்டால் மீண்டும் நம் உள்ளம் அதற்கு அடிமையாகும்.  ஆதலால் பிரியமானவர்களே எப்போதும் கிறிஸ்துவின் கிருபையினால் காக்கப்பட வேண்டும்.  இப்படியாக நாம் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.