தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 10:24,25 

ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.

ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால் என் கோபமும் தீர்ந்துபோம் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் காக்கப்படும்படியாகவும்,சத்துருவினால் கர்த்தர் நம்மை சிறைப்படுத்தாமலும் இருக்கும்படியாக கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்படிவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுகியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் அசீரியனுடைய அலங்காரத்தால் (பாரம்பரிய நடத்தைகளில்) விழாதபடி கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ண வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம், 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 19:20 

அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபின்நிமித்தம் நீ என்னை நோக்கிப் பண்ணின விண்ணப்பத்தைக் கேட்டேன்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் எசேக்கியா அசீரிய ராஜாவினால் அனுப்பப்பட்ட நிருபங்களை வாசித்தப்பின்பு, கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணுகிறான்.  பின்பு ஏசாயா எசேக்கியாவுக்கு சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்; அசீரியா ராஜாவாகிய சனகெரிப்பினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணினதை கேட்டேன். பின்பு அவர் அவனைக்குறித்து சொன்ன வசனமாவது 

2 இராஜாக்கள் 19:21-24 

அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாயல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய்?

உன் ஸ்தானாபதிகளைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரி விருட்சங்களையும் நான் வெட்டி, அதின் கடையாந்தரத் தாபரமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,

நான் அந்நியதேசங்களில் கிணறு வெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் அசீரிய ராஜா தன் மேட்டிமையினால் கர்வங்கொண்டு கர்த்தருடைய ஜனங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியில் வளர விடாமல் உள்ளத்தை வஞ்சித்ததை யெல்லாம் அவன் நினைத்து தன்னை தான் மெச்சிக்கொள்கிறான் என்பதனை கர்த்தர் தீர்க்தரிசி மூலம் சொல்லியனுப்புகிறார். மேலும் கர்த்தர் சொல்கிறார் 

2 இராஜாக்கள்19:25-28 

நான் வெகுகாலத்திற்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள் முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்.

அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள்.

உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம் பேசினது என் செவிகளில் ஏறினபடியினால், நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டு போவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.

மேற்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும் போது கர்த்தர் அசீரிய ராஜாவுக்கு சொல்லுகிற காரியங்கள்: கர்த்தரால் எல்லா உள்ளங்களிலும் நான் தான் செய்தேன் என்கிறார். ஆனால் அவனோ தான் என்று மிஞ்சிக்கொண்டதினால் நான் என் துறட்டை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே திருப்பிக்கொண்டு போவேன் என்கிறார்.  

மேலும் இந்த காரியத்தைக் குறித்து கர்த்தர் நமக் திருஷ்டாந்தப்படுத்துகிறது என்னவென்றால் ஒரு ஆத்துமா கிறிஸ்துவின் கிருபையினால் இரட்சிப்பை சுதந்தரித்தால் அவர்களில் இருக்கிற பாரம்பரிய செய்கைகள் சகலமும் அழிக்க கர்த்தர் சித்தமுள்ளவராதலால்தேவ வசனத்திற்கு கீழ்படியாதவர்களுக்கு,  கர்த்தர்  அவருக்கு கீழ்படியும் வரையில் சத்துருவை அனுப்பி அவர்கள் பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய ஆசீர்வதங்களை அழிக்கிறார்.  அப்போது சத்துரு தான் செய்ததாக தன்னை தான் மெச்சிக்கொள்கிறதினாலும், தேவனை நிந்தித்து  தூஷிக்கிறதினாலும் கர்த்தர் அவனை கர்த்தருடைய வசனத்தால் கடிந்து அந்த சத்துருவின் கிரியைகளை அவர்களிலிருந்து அகற்றிவிட்டு, அந்த ஆத்துமா கிறிஸ்துவுக்குள் வளரும்படி தேற்றுகிறார். ஆதலால் பிரியமானவர்களே, நம்முடய உள்ளத்தின் செயல்களை நம்மை நாமே சோதித்து அறிந்து சத்துருவினால் தகர்க்கப்படாதபடி கர்த்தரின் கரத்தில் சீக்கிரத்தில் முழுமையாக விழுவோமானால்  கர்த்தர் நம்மை சத்துருவினின்று விடுதலையாக்கி இரட்சிப்பார்.  இப்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.