தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 10:12

ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அசீரியனுடைய அலங்காரத்தால் (பாரம்பரிய நடத்தை) விழாதபடி கர்த்தரிடத்தில்  விண்ணப்பம் பண்ண வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுகியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் வருகிற தூஷணங்களுக்கும், நிந்தனைகளுக்கும் கலங்காமலும் பயப்படாமலும் இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

2 இராஜாக்கள் 19:8-11 

அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.

இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே.

இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ?

மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது கர்த்தர் ஆசீரியனுக்குள்ளே ஒரு ஆவியை அனுப்பி அவனை பட்டயத்தால் விழ பண்ணுவேன் சொன்னது போல   கர்த்தர் அந்த ஆவியை அனுப்பினதும், அசீரிய ராஜா லாகீசை விட்டு புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பி போய், அவன் லிப்னாவின் மேல் யுத்தம் பண்ணுகிறதைக் கண்டான். எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம் பண்ண புறப்பட்டான் என்று கேள்விபட்டான்.  அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, சொல்ல சொன்னது என்னவென்றால் எருசலேம் அசீரிய ராஜாவினிடத்தில் ஒப்புக்கொடுக்கபடுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற  உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே.  இதோ அசீரிய ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ? மேலும் தன் பிதாக்கள் சங்கரித்த தேசத்தையும் அசீரியா ராஜா  

2 இராஜாக்கள் 19:12,13 

என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயிம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே? என்று சொல்லுங்கள் என்றான்.

மேற்கூறப்பட்ட இடங்களையும் சொல்லுங்கள் என்று சொல்லியனுப்பினான். இதனை கேட்ட எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபங்களை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்கு போய், கர்த்தருக்கு முன்பாக விரித்து 

2 இராஜாக்கள் 19:15-19 

கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும்.

கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.

இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

மேறக்கூறிய கருத்துக்களைக் கர்த்தரிடத்தில் வைத்து விண்ணப்பம் பண்ணுகிறதை பார்க்கிறோம். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட கருத்துக்கள் நாம் தியானிக்கும் போது, கர்த்தரின் ஆவியை அவர் நமக்குள்ளாக அனுப்பி அசீரிய கிரியைகளும், எத்தியோப்பிய கிரியகளுமாகிய பொல்லாத ஆவிகள் போராடும் படி  செய்கிறார்.  இந்த காரியங்களை கர்த்தர் நமக்குள் நடப்பிக்கும் போது நம் வாழ்வில் பல சிக்கல்களும், நெருக்கங்களும் ஏற்படுகிறது.  அப்போது நிற்க நிலையில்லாமல் மனது அலைகழிக்கப்படும்போது, நம் அலங்காரங்கள் குறைக்கப்பட்டு, மேட்டிமைகள் குறைந்து கர்த்தரை தேடும்படியான இருதயம் நமக்கு வருகிறது.  ஆனால் முழுமையாக அவன் இறங்குவதில்லை, ஏனென்றால் முந்தின வருஷங்களிலெல்லாம் அவன் கல்லையும், மரத்தையும் வணங்கினவர்கள் தேவனை விட்டு தூரமாய் அவன் இழுத்துக்கொண்டதை நினைக்கிறான்.  ஆனால் கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுக்கொள்ளுகிறவர்களை அவன் கீழே தள்ளவிடாமல் கர்த்தர் அவர்களுக்கு துணையாயிருக்கிறார் என்பதனை அறியாமல் கர்த்தரை நிந்தித்து தூஷிக்கிறான். ஆதலால் எப்போதானாலும் அசீரியனால் நாம் கர்த்தரை விட்டு தூரமாய் விலகி போகாதபடி  கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணுவோம்.  இப்படியாக நாம் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.