தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1பேதுரு 4:14

நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் வருகிற தூஷணங்களுக்கும், நிந்தனைகளுக்கும் கலங்காமலும் பயப்படாமலும் இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுகியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை விட்டு வழிதப்பி போகாமலும், வஞ்சிக்கப்படாமலும் கர்த்தரையே சார்ந்து வாழவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 19:1-7 

ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,

அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்தின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்துக்கு இரட்டு உடுத்திக்கொண்டவர்களாக அனுப்பினான்.

இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைபேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை.

ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.

இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் அசீரியா ராஜா, ரப்சாக்கேயிடம் சொல்லியனுப்பினதை கேட்ட எசேக்கியா ராஜாவின் ஆட்கள் அந்த காரியங்களை எசேக்கியா ராஜாவிடம் தெரிவிக்கிறார்கள்.  எசேக்கியா ராஜா அதனை கேட்ட போது தன் வஸ்திரங்களை கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்தின் குமாரனகிய ஏசாயா தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்திக்கொண்டவர்களாக அனுப்பினான். இவர்கள் அவனை நோக்கி சொன்னது இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும், அனுபவிக்கிற நாள்; பிள்ளை பேறு நோக்கியிருக்கிறது  பெறவோ பெலனில்லை; இவ்விதமாய் எசேக்கியாவின் ஊழியக்காரர் வந்து ஏசாயா தீர்க்கதரிசியினிடததில் வந்து சொன்னார்கள்.  அப்போது ஏசாயா அவர்களை நோக்கி அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் தூஷித்ததும், நீர் கேட்டுக்கொண்ட வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.  இதோ நான் ஒரு செய்தியை  கேட்டு, தன் தேசத்திற்கு திரும்புவதற்கான ஒரு ஆவியை அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர உரைக்கிறார் என்று சொல்லுங்கள் என்றான். 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வார்த்தைகள் இரட்சிக்கப்படுகிற நம்முடைய வாழ்வில்; அசீரிய ராஜாவாகிய நம்முடைய பாரம்பரிய உலகத்தின் ஆவியினால் நெருக்கமும், தூஷணங்களும் கண்டிதங்களும் நமக்கு உண்டாகும்.  இந்த காரியத்தை கர்த்தரிடத்தில் அறிவிப்போமானால் அவர் நமக்குள்ளாக ஒரு ஆவியை அனுப்புகிறார்.  அந்த ஆவியை குறித்ததான காரியங்களை அடுத்த நாளில் கர்த்தருக்கு சித்தமானால் தியானிப்போம்.  இவ்விதமாக தேவன் நம்மை சத்துருவின் நிந்தனைக்கும், தூஷணத்திற்கும் ஒப்புக்கொடாமல் விலக்கி இரட்சிக்கிறவர் என்பதனை கருத்தில் கொண்டு கர்த்தரையே பின்பற்றி வாழும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.