தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 9:10 

கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சாத்தானுடைய தந்திரத்தால் விழுந்து விடக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்மில் எந்த பாரம்பரிய உலகவழிபாடுகளோ, மற்றும் மாம்சத்தை பேணி அலங்கரித்தலோ இல்லாமல் ஜாக்கிரதையாக நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 18: 9-13

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் ஏழாம் வருஷத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாய் வந்து அதை முற்றிக்கை போட்டான்.

மூன்று வருஷம் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருஷத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்திலும் சமாரியா பிடிபட்டது.

அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.

அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், அவருடைய உடன்படிக்கையையும் கர்த்தரின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதற்குச் செவிகொடாமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள்.

யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒசெயாவின் ஏழாம் வருஷத்திற்கு சரியான எசேக்கிய ராஜாவின் நாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாய் வந்து முற்றிக்கை போட்டார்கள்.    அசீரிய ராஜா இஸ்ரவேலை  அசீரியாவுக்கு சிறைப்பிடித்துக் கொண்டு போய், கோசோன் நதி ஓரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.  அவர்கள் தங்கள் தேவனாகிய சத்தத்திற்கு செவிக்கொடாமல், அவருடைய உடன்படிக்கையும், கர்த்தருடைய தாசனாகிய மொசே கூறின யாவற்றையும் மீறி அதற்கு செவிக்கொடாமலும் அதன்படி செய்யாமலும் போனார்கள். யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்தில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலுள்ள சகலப்பட்டணங்களுக்கும்  விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான்.  அப்பொழுது எசேக்கியா லாகீசிலுள்ள அசீரிய ராஜாவுக்கு சொல்லியனுப்பினது 

2 இராஜாக்கள்18:14 

அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பி: நான் குற்றஞ்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான்.

மேற்கூறப்பட்ட காரியங்களை சொல்லியனுப்பிய பின்னும் அசீரியா  ராஜா, எசேக்கியாவின் மேல் முந்நூறு தாலந்து வெள்ளளியும், முப்பது தாலந்து பொன்னும் சுமத்தினான்.  ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும், ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான். பின்னும் எசேக்கியா

2 இராஜாக்கள் 18:16  

அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா கர்த்தருடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான்.

மேற்கூறப்பட்டவைகளை எசேக்கியா, அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தும், அசீரியா ராஜா 

2 இராஜாக்கள் 18:17,18 

ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,

ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.

மேற்கூறப்பட்டவைகளின் விளக்கம் என்னவென்றால்  நம்முடைய உள்ளமாகிய தேவனுடைய ஆலயம் வஞ்சிக்கப்பட்டால் நம் உள்ளத்திற்குள் என்ன நடக்கும் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். எப்படியெனில் பிரியமானவர்களே, கர்த்தரின் சத்தம் கேட்டு நடக்கிற நாம் ஒரு போதும் பாரம்பரியத்தை நினைக்கவோ, சிந்திக்கவோ கூடாது.  ஏதாவது ஒரு காரியத்திலாகிலும் நாம் விழுந்து விட்டால் நம் ஆத்துமா  சிறைப்படுத்தப்பட்டு, பின் நம் உள்ளம் முழுமையும் கர்த்தரை விட்டு தூரமாய் விலகி, அவர் வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் உலக இன்பங்களால் நிறைக்கப்பட்டு விடுவோம்.  ஆனால் கர்த்தர் நமக்கு தந்திருக்கிற சில ஆவிக்குரிய காரியங்களை  சத்துருவுக்கு அடிமையாக்கி விட்டால், அதோடு சத்துரு திரும்பி போவாமல், கர்த்தர் நமக்கு தந்திருக்கிற முழு பெலத்தையும் அடியோடு அழிக்க வேண்டும் என்று நினைத்து நம் உள்ளத்தில் பெரிய சேனையோடு வந்து நின்று அவனண்டையில் நம்மை தந்திரமாக இழுத்துக்கொள்வான்.  ஆதலால் நாம் எப்போதும் எச்சரிக்கையாயிருந்து, உலக அலங்கார, ஆசை இச்சை மோகம் இவைகள் கொஞ்சமும் நம் உள்ளத்தை தொடாதபடி கர்த்தரிடத்தில் மற்றுமே பற்றுதலாயிருந்து கர்த்தரை சேவிப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.