தேவனுக்கே மகிமையுண்டாவதாக

உபாகமம் 28:9

நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்மில் எந்த பாரம்பரிய உலகவழிபாடுகளோ, மற்றும் மாம்சத்தை பேணி அலங்கரித்தலோ இல்லாமல் ஜாக்கிரதையாக நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் பிதாக்கள் செய்த பாவம் நாம் செய்யாதபடி நம்மை ஜாக்கிரதையோடு காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 18:1-8 

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.

அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி.

அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.

அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.

அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.

ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.

அவன் பெலிஸ்தரைக் காசாமட்டும் அதின் எல்லைகள் பரியந்தமும், காவலாளர் காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான நகரங்கள் பரியந்தமும் முறிய அடித்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேல் ராஜாவாகிய ஏலாவின் குமாரனாகிய ஒசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.  அவன் ராஜாவாகிற போது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன்தாயின் பெயர் ஆபி.  அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின்  பார்வைக்கு செம்மையானதை செய்தான்.  அவன் மேடைகளை அகற்றி, விக்கிரக தோப்புகளை வெட்டி, சிலைகளை தகர்த்து, மோசே பண்ணியிருந்த வெண்கலை சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்.  அந்நாள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்கு தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.  அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் மேல் வைத்த நம்பிக்கையினாலே, அவனுக்கு பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப் போல் ஒருவனும் இருந்ததில்லை.  அவன் கர்த்தரை விட்டு பின் வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.  ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் வருகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று; அவன் அசீரிய ராஜாவை சேவியாமல் அவன் அதிகாரத்தை தள்ளிவிட்டான்.  அவன் பெலிஸ்தரைக் காசா மட்டும் அதன் எல்லைகள் பரியந்தமும், காவலாளர் காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான நகரங்கள் பரியந்தமும் முறிய அடித்தான்.  

பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்ட வார்த்தைகள் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தத்திற்க்கென்று கொடுக்கப்பட்டிருக்கிறது.  அதென்னவென்றால் நாம் கிறிஸ்துவினால் இரட்சிக்கபபட்டு ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்கும் போது நம்முடைய பாரம்பரிய செயல்களாகிய நம்முடைய முன்னோர்களால் செய்யப்பட்டதும், உருவாக்கப்பட்டதும், மற்றும் நம் உள்ளத்தில் விதைத்த வித்துக்களாகிய,  நாம் செய்துவருகிற உலக வழிபாடுகளாகிய மனுஷனால் நியமிக்கப்பட்ட கற்பனையாகிய  சகல காரியங்களையும், எசேக்கியா அகற்றியது போல் நாம் அகற்றி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பேரில் மட்டுமே நம்பிக்கை வைப்போமானால், அவரை விட்டு எந்த சூழ்நிலமையிலும் பின் வாங்காமலும் அவரையே சார்ந்திருந்து அவர் தந்த சகல கற்பனைகளை கைக்கொண்டு நடந்தால், நாம் போகிற இடம் வருகிற இடம் எல்லாவற்றிலும்  கர்த்தர் நம்மோடிருந்து நமக்கு அனுகூலமாயிருப்பார்.  அல்லாமலும் அசீரிய ராஜாவை சேவிக்காமல் அவன் அதிகாரத்தை எசேக்கிய தள்ளிவிட்டான் என்றால், நாம் அழகுப்படுத்தபடும்படியாக அலங்காரத்தின் எல்லா செயல்களையும் முழுமையாக  தள்ளிவிட வேண்டும். மேலும் பெலிஸ்திய கிரியைகளாகிய பொன், வெள்ளி இவற்றால் உள்ள அலங்கரிப்பு முழுமையும் முற்றிலும் முறியடித்து, கர்த்தர் ஒருவரே என் இரட்சகர் என்று முழுமையாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.