தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 139:24

வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தில் உள்ள பொல்லாத வழிகளை விட்டு கர்த்தரின் பாதையாகிய நல்ல பாதையில் நடப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நித்திய மீட்பை கிறிஸ்துவினிடத்தில் மட்டும் பெற்று கொள்ள முடியும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 15:1-12 

இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரன் அசரியா ராஜாவானான்.

அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.

அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.

கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.

அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

அசரியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி,

தன் பிதாக்கள் செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.

யாபேசின் குமாரனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

சகரியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

உன் குமாரர் நாலாம் தலைமுறைமட்டும் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே ஆயிற்று.

மேற்கூறிய வசனங்களில் இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின் அவன் குமாரனாகிய சகரியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். இஸ்ரவேலின்  ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரன் அசரியா ராஜாவானான். அவன் ராஜாவாகிற போது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டன்; எருசலேம் நகரதத்தாளான அவன் தாயின் பெயர் எக்கோலியாள்.  அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான்.  மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை;  ஜனங்கள்  இன்னும் மேடைகள் மேல் பலியிட்டு வந்தார்கள்.  கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன்தன் மரணநாள் மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டில் வாசம் பண்ணினான்.; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.  அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை  யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. பின்பு அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணபட்டான்.  அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தனத்தில் ராஜாவானான்.  யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின் மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம் பண்ணி, தன் பிதாக்கள் செய்தது போல, கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான்; இஸ்ரவேலை பாவஞ்செய்ய பண்ணின யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.  யாபேசின் குமாரன் சல்லூம் அவனுக்கு விரோதமாக கட்டுபாடு பண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக்கொன்றுப்போட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  சகரியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.  மேலும் உன் குமாரர் நாலு தலைமுறை மட்டும், இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யெகூவோடே சொன்ன வார்த்தை இதுவே, அது அப்படியே ஆயிற்று.

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, யூதாவின் ராஜாக்கள் தங்கள் மேடைகள் தலைமுறை தோறும் அகற்றபடாமலிருக்கிறது; ஆனால் கர்த்தருக்கு செம்மையானவைகளை செய்தாலும் மேடைகள் அகற்றப்படாமல் இருந்ததால் கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவராய் காணப்படுகிறார். ஆனால் யூதாவின் ராஜாவாகிய அசரியாவுடைய வாழ்வில் குஷ்டரோகியாக வாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தபடுகிறான்,  இப்படியாக நாமும் விக்கிரக மேடைகள் அகற்றாமல் இரும்போமானால் நம் உள்ளான மனுஷனில் பாவம் பெருகி குஷ்டரோகியாய் வாதிக்கபட்டால்,  கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கபடும் வரையிலும் நாம் தனிமைப்படுத்தபடுகிறோம்; மற்றவர்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் இருப்போம். ஏனென்றால் இது நமக்காக திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் இதனைக்குறித்து 

2 பேதுரு 3:8,9 

பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் நம் முழுமையும் மனந்திரும்ப வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.  மேலும் நம்முடைய ஆத்மீகத்தில் பின்வரும் காரியங்களை குறித்து கர்த்தர் சொல்லும் வார்த்தைகளில்  எந்த மாற்றமும் வருவதில்லை  என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.  என்னவென்றால் யெகூவிடம் கர்த்தர் சொன்ன காரியம் அப்படியே சம்பவிக்கிறது; ஆனால் நாம் நம்முடைய வாழ்வில் பொல்லாத செயல்களை விட்டு, செம்மையான காரியங்களை செய்வோமானால், கர்த்தர் நமக்கு தீமைக்காக சொல்லியிருந்தாலும் நன்மையாக மாற்றுகிறார் என்பதனை நாம் தெரிந்துக்கொண்டு நம்மிடத்தில் உள்ள பொல்லாதவழிகளை விட்டு நல்வழியை கர்த்தரிடத்தில் கற்றுக்கொண்டு, அவ்வண்ணமாக நடக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.