தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 9: 11,12 

கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,

வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நித்திய மீட்பை கிறிஸ்துவினிடத்தில் மட்டும் பெற்று கொள்ள முடியும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம் நம்முடைய கர்வத்தினால் இருதயம் பெருமையடைந்து, கர்த்தர் நமக்கு தந்தருளின நன்மைகளையும், ஆத்துமாக்களையும் இழந்து போகாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 14:17-29 

இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்துவருஷம் உயிரோடிருந்தான்.

அமத்சியாவின் மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

எருசலேமிலே அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினார்கள்; அப்பொழுது லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவர்கள் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பி, அங்கே அவனைக் கொன்றுபோட்டு,

குதிரைகள்மேல் அவனை எடுத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலாதைக்கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.

யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியாவின் பதினைந்தாம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருஷம் அரசாண்டு,

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை.

காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்.

இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார்.

இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார்.

யெரொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யுத்தம்பண்ணி, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாக்களாகிய தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய சகரியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் மரணமடைந்த பின்பு, யூதாவின் ராஜாவாகிய அமத்சியா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான். அமத்சியாவுடைய மற்ற வர்த்தமானங்களும், யூதாவுடைய ராஜாக்களின் நாளகம புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.  எருசலேமிலே அவனுக்கு விரோதமக கட்டுபாடு பண்ணிக்கொண்டதால் லாகீசுக்கு ஓடிப்போனான்.  அங்கே அவர்கள் லாகீசுக்கு மனுஷரை அனுப்பி, அங்கே அவனை கொன்றுப்போட்டு, அவனை குதிரைகள் மேல் எடுத்துக்கொண்டு வந்தார்கள். அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம் பண்ணபட்டான். யூத ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்து கொண்டு வந்து தன் தகப்பனுடைய ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.  ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின், இவன் ஏலாதைக் கட்டி, அதை திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியாவின் பதினைந்தாம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தியொரு வருஷம் அரசாண்டு கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான்.  அவன் நேபோத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலக வில்லை.  காத்தேப்பேர் ஊரானாகிய  அமித்தா என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின் படியே அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல் மட்டும் இஸ்ரவேலின் எல்லைகளை திரும்ப சேர்த்துக்கொண்டான். இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்று கர்த்தர் பார்த்தார்.  இஸ்ரவேலின் பெயரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல் யோவாசின் குமாரன் யெரொபெயாமின் கையால் அவர்களை இரட்சித்தார். யெரொபெயாமின் எல்லா வர்த்தமானங்களும், அவன் செய்தவையாவும், யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும், ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காக சேர்த்துக்கொண்டதை எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாக்களாகிய தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின் அவன் குமாரனாகிய சகரியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வாரத்தைகளை நாம் தியானிக்கும் போது, எந்த ராஜாக்களாலும் ஒருநாளும் யாருக்கும் நித்திய சமாதானம் தேடி தரமுடியாது என்பதும், எந்த ராஜாக்களானாலும் முழுமையான பரிசுத்த வாழ்வு வாழ்ந்தவர்கள் யாருமில்லை என்பதும்; நேபோத்தின்   குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யாரும் விட்டு விலகவில்லை என்பதும், அவர்கள் அப்படி விலகாமல் இருந்ததால் கர்த்தர் அவர்களை யுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார் என்பதும் புரிய வருகிறது. அல்லாமலும் கர்த்தர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்கு கொடுத்த உடன்படிக்கையினால் இஸ்ரவேலை வானத்தின் கீழ் அற்றுபோகாதபடி, தன் குமாரனால் வெளியரங்கமான மீண்டெடுப்பு வரும் வரையிலும்,இஸ்ரவேலை இரட்சித்த விதம் விக்கிரக மேடைகள் வைத்திருந்தவர்களால் இரட்சிக்கிறார்.  மேலும் தாவீதுக்கு ஒரு விளக்கு அணையாமல் இருக்கும்  என்று உடன்படிக்கைப்பண்ணினவர்; அதனை நிவிர்த்தியாக்குகிறவராக எல்லா ராஜாக்களிலும் பூரணப்படாத பொல்லாப்புகள் இருக்கிறது என்பதை நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆதலால் எந்த மனுஷனாலும் நமக்கு இரட்சிப்பு இல்லையென்றும்,நம்மை இரட்சிக்கிறவர் நம்மில் வரும்படியாக அவருக்காக காத்திருந்து நித்திய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.