தேவனுக்கே மகிமையுண்டாவதாக
பிலிப்பியர் 2: 3
ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய கர்வத்தினால் பெருமையடைந்து கர்த்தர் நமக்கு தந்த ஆவிக்குரிய நன்மைகளையும் ஆத்துமாக்களையும் இழந்து போகாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு செம்மையானவைகளை செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 14: 1- 8
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாசுடைய இரண்டாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா ராஜாவானான்.
அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் யொவதானாள்.
அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்.
மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
ராஜ்யபாரம் அவன் கையிலே ஸ்திரப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.
ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்கள் கொலைசெய்யப்படாமலும் பிதாக்களினிமித்தம் பிள்ளைகள் கொலைசெய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்ட பிரகாரம் கொலைசெய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான்.
அவன் உப்புப் பள்ளத்தாக்கிலே ஏதோமியரின் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத்தரித்தான்.
அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச் சொன்னான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேல் ராஜாவாகிய யோவகாசின் குமாரன் யோவாசுடைய இரண்டாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா ராஜாவானான். அவன் ராஜாவாகிற போது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பெயர் யோவதானாள். அவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான்; ஆனால் தன் தகப்பனாகிய தாவீதைப் போலல்ல, தன் தகப்பனாகிய யோவகாஸ் செய்தபடியெல்லாம் செய்தன். மேடைகள் மாத்திரம் அகற்றப்டவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின் மேல் பலியிட்டு தூபங்காட்டி வந்தார்கள். ராஜ்யபாரம் அவன் கையிலே ஸ்திரப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவை கொன்றுப்போட்ட தன் ஊழியக்கரரைக் கொன்றுப்போட்டான் ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்கள் கொலைச் செய்யப்படாமலும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகள் கொலைசெய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்பட வேணடும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்ட பிரகாரம் கொலை செய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான். அவன் உப்புப் பள்ளதாக்கிலே ஏதோமியரில் பதினாயிரம் பேரை மடங்கடித்து, யுத்தம் செய்து சேலாவை பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரை தரித்தான். அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி நம்முடைய சாமர்த்தியத்தை பார்ப்போம் வா என்று சொல்ல சொன்னான். அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் சொல்லியனுப்பிய வார்த்தைகள்
2 இராஜாக்கள் 14:9,10
அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்துகொடு என்று சொல்லச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
நீ ஏதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; நீ பெருமைபாராட்டிக்கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச் சொன்னான்.
மேற்கூறிய வார்த்தைகளை கேட்ட அமத்சியா செவிக்கொடாதே போனான். ஆகையால் இஸ்ரவேல் ராஜாவாகிய யோவாசும், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவும் பெத்ஷிமேசிலே தங்கள் சாமர்த்தியத்தை பார்க்கிறபோது, யூத ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்தோடி அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். அகசியாவின் குமாரனாகிய யோவாசின் குமாரனாகிய யோவாசின் குமாரன் அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவையோ, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் பெத்ஷிமேசிலே பிடித்து, எருசலேமுக்கு வந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறு முழநீளம் இடித்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயத்திலும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட பொன் வெள்ளி யாவையும், சகல பணிமுட்டுகளையும்,கிரியிருப்பவர்களையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்கு திரும்பிப் போனான். யோவாஸ் செய்த மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய வல்லமையும், அவன் யூதாவின் ராஜவாகிய அமத்சியாவோடு யுத்தம் பண்ணின விதமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின், சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான். அவன் குமாரனாகிய யெரொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைளை தியானிக்கும் போது இவைகள் நம் உள்ளத்தில் எழும்புகிற ஆவிக்கும், மாம்சத்திற்கும் உள்ள போராட்டத்தை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். எப்படியென்றால் ஒரு போதும் இரண்டும் ஒன்று போல் செயல்படுவதில்லை. ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும்; மாம்சம் ஆவிக்கு விரோதமாக போராடும். இவ்வித பொல்லாத எண்ணங்கள் நம்மில் முறியடித்து ஒரே சிந்தையாகிய ஆவிக்குரிய சிந்தைகள் நம்மில் வெளிப்பட வேண்டும். என்னவென்றால் உள்ளான மனுஷனுடைய எண்ணங்களும், சிந்தனைகளும்; நம்முடைய ஆத்துமாவின் எண்ணங்களும் தோற்றங்களும் ஒன்றாகும் வரையிலும், நம் எண்ணங்களின் நினைவுகளும் சத்தியத்தின்படி வாழுவதற்கு தடையாகிக்கொண்டிருக்கும். அப்படியிருக்கும் போது நமக்குள் பொல்லாத எண்ணங்கள் எழும்பும். இவ்விதமாக பொல்லாத எண்ணங்கள் எழும்பினால், நாம் மற்றவர்களை அற்பமாக நினைப்போம். இவ்வித அற்பமான நினைவுகள் நம் ஆவிக்குரிய வாழ்வின் தோல்வியை சந்திக்கும். இந்த தோல்வி எப்படி வருகிறதென்றால் கர்த்தர் நமக்கு கொஞ்ச பெலன் தந்து சத்துருவை ஜெயிப்பதற்கு காரணமானால், நமக்குள் மேட்டிமை வருகிறது. இந்த மேட்டிமையினால், நம்முடைய அலங்கம் இடிக்கப்படுகிறது, அப்படியாக அலங்கம் இடிக்கப்பட்டு கர்த்தரால் பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய நன்மையை இழக்க வேண்டியது வரும். ஆதலால் நாம் ஒருபோதும் ஆவிக்குரிய நன்மையை இழந்து போகாதபடி ஜாக்கிரதையோடு நம்மை காத்துக்கொள்வோம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.