தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 25: 20

என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு செம்மையானவைகளை செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தின் விக்கிரக எண்ணங்களையும், தோற்றங்களையும் அழித்து, நம்முடைய சகல பாரம்பரிய பழக்கவழக்கங்களை விட்டு கர்த்தரை கருத்தோடு தேடுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 13:20-25 

எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.

அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.

யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்.

ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு இரங்கி, ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்கச் சித்தமாயிராமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார்.

சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இறந்துபோய், அவன் குமாரனாகிய பெனாதாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவான பின்பு,

யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், ஆசகேலோடே யுத்தம்பண்ணி, தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக்கொண்ட பட்டணங்களை அவன் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்துக் கொண்டான்; மூன்றுவிசை யோவாஸ் அவனை முறியஅடித்து இஸ்ரவேலின் பட்டணங்களைத் திரும்பக் கட்டிக்கொண்டான்.

மேற்கூறப்பட்ட வசனங்களின் படி தேவனுடைய மனுஷனாகிய எலிசா, இஸ்ரவேல் ராஜாவாகிய யோவாசிடம்; மரணத்திற்கு ஏதுவான வியாதியில் கிடந்த போது சொன்ன வார்த்தையாவது சீரியரை மூன்று விசை மட்டுமே முறிய அடிப்பீர் என்று யோவாசுக்கு சொல்கிறான்.  அதன் பின்பு எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம் பண்ணினார்கள்; மறு வருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.  அப்பொழுது அவர்கள் ஒரு மனுஷனை அடக்கம்பண்ண போகையில் அந்த தண்டைகண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்;  அந்த மனுஷரின் பிரேதம் அதிலே விழுந்து, எலிசாவின் எலும்புகளின் மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.  யோவகாசின் நாட்ககளிலெல்லாம் சீரியரின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்.  ஆனாலும் இரக்கமுள்ள தேவன் அவர்களுக்கு இரங்கி, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்க சித்தமாயிராமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தை விட்டு தள்ளாமலும் அவர்கள் மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார்.  சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இறந்து போய், அவன் குமாரனாகிய பெனாதாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான்.   ராஜாவாகிய யோவாஸ், ஆசகேலோடே யுத்தம் பண்ணி, தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக் கொண்ட பட்டணங்களை, அவன் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்ப பிடித்துக் கொண்டான். எலிசா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின் படியே, யோவாஸ் மூன்று விசை மட்டும்  சீரியரை முறியடித்து, இஸ்ரவேலின் பட்டணங்களைபிடித்துக்கொண்டன்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, நாம் முழுமையாக பரிசுத்தமாக வாழாமல் பொல்லாத அருவருப்பான கிரியைகளையும் செய்துக்கொண்டிருப்போமானால், ஒரு போதும் நம்முடைய வாழ்வில் சமாதானம் பெற்றுக்கொள்ள முடியாது என்பதும்; நம் உள்ளத்தில் அருவருப்பான எண்ணங்களை வைத்துக்கொண்டு கர்த்தரை தேடுவோமாகில்; தொடர்ந்து சத்துரு நம்மில் கிரியை செய்வதற்கு ஏதுவாகும் என்பதும்; கர்த்தரின் சத்திய வார்த்தைகளின் படி நடவாமலிருப்போமானால் மோவாபியரின் பெருமை நம்மில் வரும்; அது தேவனுக்கு முன்பாக அருவருப்பானதாகும்.  மேலும் நம் வாழ்வில் மேட்டிமையான எண்ணங்கள் இருக்குமானால்; அதில் கிறிஸ்துவின் ஜீவன் பெற்றுக்கொள்ளமுடியாமல் நம் ஆத்துமா மரித்துபோகும்.  அவ்விதம் மரித்த ஆத்துமா ஜீவன் அடைய வேண்டுமானால் கர்த்தரின் ஆவி அவர்கள் மேல் படும் போது; மரித்த ஆத்துமா உயிரடையும்.  அல்லாமலும் எலிசாவின் கல்லறையின் மேல் மனுஷரின் பிரேதம் விழுந்து, எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.  இதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது எதற்கென்றால் கிறிஸ்துவை விசுவாசித்தால் அவன் மரித்தாலும் பிழைப்பான் என்று வேத வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறதை கர்த்தர் தெளிவுப்படுத்துகிறார்.  மேலும் யோவகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்குகிறான்.  ஆனாலும் மேற்கூறபட்ட ராஜாக்களை கர்த்தர் தாங்குவது என்னவென்றால்;  கர்த்தர் தம்முடைய தாசனாகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு செய்த உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்க சித்தமாயிராமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டு தள்ளாமலும் அவர்கள் மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளுகிறாரென்றால், நாம் ஒவ்வொரு நாளும் செய்கிற அக்கிரமத்தை பார்க்கிற நம்முடைய தேவன், இந்நாள் வரையும் பாதுகாக்கிறார் என்பது அவர் நம்மேல் வைத்திருக்கிற உடன்படிக்கையாகிய அன்பினிமித்தம் மட்டுமே, ஆதலால் அவர் கிருபையினால் நம்மை அனுதினம் தாங்குகிறார்.  இவ்விதமாக  கர்த்தர் நம்மேல் வைத்திருக்கிற கிருபையால் மாத்திரமே, நம் முன்னோர்களால் இழக்கப்பட்ட சில காரியங்கள் நாம் மீண்டெடுக்கிறோம். இதனை நாம் கருத்தில் கொண்டு அனுதினம் கர்த்தரின் பாதத்தில் செம்மையானவைகளை செய்து அவருக்காய் வாழும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.